
குறித்த கப்பலின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
இக் கப்பலின் பெயர் 'வீனஸ்" ஆகும். இது ஜொப்ஸ் இறப்பதற்கு முன்பிலிருந்தே தயாரிக்கபட்டு வந்துள்ளது.
எனினும் அவர் இறந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரே இக்கப்பலின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் சிலர் இணைந்தே இதனை வடிவமைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலானது தோற்றத்தில் அப்பிள் ஸ்டோர் மற்றும் ஐ போன் வடிவத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.
இது முழுவதும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 70 முதல் 80 மீற்றர் நீளமுடையது.
இதனை நிர்மாணிக்க எவ்வளவு செலவாகியது என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும் இதன் பெறுமதி சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றினாலேயே இக் கப்பல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் ஸ்டீவின் குடும்பத்தினரால் ஐ பொட் சபள் ஒன்றும் நன்றிதெரிவித்து குறிப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !