- 6 எண்களின் சராசரி 10ம் வேறு 10 எண்களின் சராசரி 6உம் ஆகும். 16 எண்களினதும் சராசரி எவ்வளவு?
- ஒரு சதுரத்தின் ஒருபக்க நீளம் 100மூ இனால் அதிகரிக்கப்பட்டால் அச்சதுரத்தின் பரப்பளவு அதிகரிக்கப்படுது?
- ஒவ்வொரு நாளும் தான் செய்யும் வேலைக்காக ரவி 30 ரூபாவைப் பெறுவதுடன் அதனை மிகச் சிறப்பாக செய்யும்போது 50 ரூபாவைப் பெறுகிறான். 10 நாட்கள் வேலை செய்ததின் பின்னர் ரவி 360 ரூபாவைப் பெற்றான். ரவி எத்தனை நாட்கள் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளான்.?
- எனது பொறிமுறைக் கைக்காடிகாரம் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் இரு நிமிடங்கள் பிந்திச் செல்கிறது. இன்று பிற்பகல் 6 மணிக்கு எனது கைக்கடிகாரத்தின் நேரத்தைச் சரியாக ஒழுங்குபடுத்திக் கொண்டேனெனில் மீண்டும் நேரத்தைச் சரியாக ஒழுங்குபடுத்தாவிட்டால் எவ்வளவு காலத்தின் பின்னர் அது சரியான நேரத்தைக் காட்டும்.
- 5, 6 ஆகிய இரண்டினாலும் வகுபடத்தக்க எத்தனை இரண்டு இலக்க எண்கள் உள்ளன?
- பாடசாலை நூல் நிலையம் ஒன்றில் உள் ஒவ்வொரு நாவலுக்கும் இரண்டு விஞ்ஞானநூல்கள் உள்ளன. ஒவ்வொரு விஞ்ஞான நூலுக்கும் ஏழு பொருளியல் நூல்கள் உள்ளன. பின்வருவனவற்றில் எது பொருளியல் நூல்களுக்கும் விஞ்ஞான நூல்களுக்கும் நாவல்களுக்குமிடையே உள்ள விகிதத்தை எடுது;துக்காட்டுகின்றது.
- பரீட்சகர் ஒருவர் 50 வினாக்களைக் கொண்ட வினாத்தாள் ஒன்றுக்கு மாணவன் ஒருவன் அளித்த விடைத்தாளை திருந்தினார். அவர் திருத்தமான விடைகளின் எண்ணிக்கையிலிருந்து பிழையான விடைகளின் எண்ணிக்கையின் இருமடங்கைக் கழித்த பின்னர் அவனுக்கு 38 புள்ளிகளை வழங்கினார். மாணவன் 50 வினாக்களுக்கும் விடை எழுதியிருந்தால் அவன் எத்தனை வினாக்களுக்குத் திருத்தமாக விடை எழுதியுள்ளான்.?
- கண்ணன் A யிலிருந்து 14Km தூரத்தில் உள்ள X யிற்கு நடக்கத் தொடங்கி ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் சேகர் அதே வீதி வழியே X யிலிருந்து A யிற்கு நடக்கத் தொடங்கினார். கண்ணன் 2 Km/h இலும் சேகர்; 4 Km/h இலும் நடந்து சென்றாhல், கண்ணனைச் சந்தித்தபோது சேகர் எத்தனை Km நடந்துள்ளார்.
- உற்பத்தி நிறுவனம் ஒன்றில் 1000 வேலையாளர்கள் உள்ளனர். இவர்களுள் 25 சதவீதத்தினர் பெண்கள். இப்பெண்களில் 40 சதவீதத்தினர் இரவு நேர வேலை செய்பவர்கள். வேலையாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதத்தினர் இரவுநேர வேலைசெய்பவர்கள் எனின் எத்தனை ஆண்கள் இரவு நேரத்தில் வேலைசெய்கின்றனர்.
- 450 Km பேரூந்துப் பயணம் ஒன்றுக்காக சராசரிக் கதி 5Km/h இனால் அதிகரிப்பின் அப்பயணத்துக்கு 1 மணித்தியாலயம் குறைவாக எடுத்திருக்கும். பின்வருவனவற்றி;ல் எது அப்பயணத்துக்கான சராசரிக் கதியை Km/h இல் தருகின்றது.
- கிறிக்கெற்றுப் போட்டித் தொடர் ஒன்று இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டத்தில் அணிகள் சம குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ழுவுக்கும் உரிய ஒவ்வோர் அணியும் மற்றைய ஒவ்வோர் அணியுடனும் ஒரு தடவை போட்டியிடுகின்றது. இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் வெற்றியீட்டுபவர்கள் தோல்வியடைந்தவர்களை வெளியேற்றும் அடிப்படையில் போட்டியிடுகின்றனர். இக்கட்டம் நான்கு கால் இறுதிப் போட்டிகைளைக் கொண்டுள்ளதெனின், போட்டித் தொடரில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை யாதாக இருக்கலாம்.
- பொறி A ஆனது குறித்த ஒரு வேலையை 8 மணித்தியாலத்தில் செய்யத்தக்கது. பொறி B ஆனது அதேவேலையை 10 மணித்தியாலயத்தில் செய்யத்தக்கது. பொறி C ஆனது அதே வேலையை 12 மணித்தியாலத்தில் செய்யத்தகக்து. மூன்று பொறிகளும் இவ்வேலையை மு.ப. 9.00 இற்குச் செய்யத் தொடங்குகின்றன. பொறி C மு.ப. 11.00 இற்குப் பழுதடைந்து, மற்றைய இரு பொறிகளும் வேலையைச் செய்து முடிக்கின்றன. அண்ணளவாக எந்நேரத்தில் இவ்வேலை செய்து முடிக்கப்படும்.
- 200 மாணவர்களைக் கொண்ட குழு ஒன்றில் 120 மாணவர்கள் பொருளாதாரத்தையும் 100 மாணவர்கள் சர்வதேசத் தொடர்புகளையும் கற்கின்றனர். மாணவர்ஒருவர் இவ்விரு பாடங்களிலும் குறைந்த பட்சம் ஒன்றையேனும் கற்க வேண்டுமெனின், சர்வதேசத் தொடர்புகளை மாத்திரம் கற்கும் மாணவர்களின் சதவீதம் யாது?
- ஒரு பொதுத் தோர்தலில் பங்குபற்றிய மக்கள் குழு ஒன்றில் 60% ஆனோர் வேட்பாளர் A இற்கு வாக்களிப்பதாகக் கூறினார். A இற்கு வாக்களிப்பதாகக் கூறியவர்களில் 90% ஆனோர் உண்மையில் A இற்கு வாக்களித்தனர். A இற்கு வாக்களிப்பதாகக் கூறாதவர்களில் 5% ஆனோர் உண்மையில் A இற்கு வாக்கிளித்தனர். A இற்கு வாக்களித்தவர்களின் சதவீதம் யாது?
- விமானப் பயணி ஒருவர் ஒரு விமானப்பயணத்தைத் திட்டமிடுகின்றார். இது மூன்று இணைக்கும் பரப்புகளுடன் சம்பந்தபபட்டுளளது. இப் பறப்புக்கள் A, B, C என்னும் மூன்று விமான நிலையங்களிலிருந்து ஆரம்பிக்கின்றன. முதற் பறப்பு காலை 8.00 மணி தொடக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் விமான நிலையம் A யிலிருந்து ஆரம்பித்து 2 மணித்தியாலயம் 30 நிமிடத்திற்குப் பின்னர் விமான நிலையம் B யை அடைகிறது. இரண்;டாம் பறப்பு காலை 8.00 மணி தொடக்கம் ஒவ்வொரு 20 நிமிடமும் விமான நிலையம் B யிலிருந்து ஆரம்பித்து 1 மணித்தியாலயம் 10 நிமிடத்திற்கு பின்னர் விமான நிலையம் C யை அடைகிறது. மூன்றாம் பறப்பு காலை 8.45 மணி தொடக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் விமான நிலையம் C யிலிருந்து ஆரம்பிக்கின்றது. எல்லாப் பறப்புக்களும் உரிய நேரத்தில் நடைபெறுமெனின், பயணி விமான நிலையங்களிலே பறப்புகளுக்கிடையே செலவிட வேண்டிய மிகக் குறைந்த அளவு மொத்த நேரம் யாது?
- 10 Cm அகலமும் 15 Cm நீளமும் உள்ள செவ்வக ஒளிப்படம் ஒன்று அகலம் 22 Cm ஆக இருக்கத்தக்கதாக உருப்பெருப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அகலத்திற்கும் நீளத்திற்குமிடையே உள்ள விகிதம் மாறாமல் இருக்கின்றது. உருப்பெருப்பித்த ஒளிப்படத்தின் Cm இலான நீளம் யாது?
- வெறிதாக இருக்கம் நீச்சற் குளம் ஒன்றிலே மாறா வீதத்தில் நீர் நிரப்பப்படுகின்றது. அதன் கொள்ளளவில் 3/5 இற்கு நீர் நிரப்புவதற்கு 8 மணித்தியாலம் எடுக்கின்றது. நீச்சற் குளத்தில் முற்றாக நீர் நிரப்பப்படுவதற்கு மேலும் எவ்வளவு நேரம் எடுக்கும்?
(4) 3 மணி 12 நிமிடம் (5) 2 மணி 54 நிமிடம்
- மூன்று செயலாளர் ஒரு விசேட செயற்றிடத்த்தில் பணியாற்றிய நேரங்களின் அளவுகள் 1 : 2 : 5 என்னும் விகிதத்தல் உள்ளன. அவர்கள் அனைவரும் மொத்தமாக 112 மணித்தியாலயம் பணியாற்றினால், நீண்ட காலத்திற்குப் பணியாற்றிய செயலாளர் செயற்றிட்டத்தில் எவ்வளவு மணித்தியாலத்துக்குப் பணியாற்றினார்?
- 2. மோட்டார் வண்டிப் போட்டியொன்றில் சில கார்களும் சில மோட்டார்சைக்கிளும் சில ஓட்டோக்களும் பங்குபற்றின. பங்குபற்றிய வாகனங்களின் ரயர்களின் மொத்த எண்ணிக்கை 109. சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 35 ஆகும். ஓட்டோக்களின் எண்ணிக்கை காரின் எண்ணிக்கையை விட 6 குறைவாகும். ஆகவே எத்தனை கார்கள். மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்கள் போட்டியில் கலந்து கொண்டன ?
- மூன்று தவணைப் பரீட்சைகளிலும் ஒரு மாணவன் பெற்ற சராசரிப் புள்ளிகள் 72 ஆகும். முதலாம் மூன்றாம் தவணைப் பரீட்சைகளில் முறையே 70, 80 புள்ளிகளை அவன் பெற்றிருந்தான் எனில். இரண்டாந்; தவணையில் அவன் பெற்ற புள்ளிகள் எத்தனை ?
- ஒரு பாடசாலையில் ஆசிரியர் குழுவில் ஆண்களுள் 20% மானோரும் பெண்களில் 40% மானனோரும் கல்விச் சுற்றுலாவில் பங்குபற்றினர். ஆசிரியர் குழுவில் 32% மானோர் ஆண்களெனின் மொத்த ஆசிரியர்களுள் எத்தனை சத வீதத்தினர் சுற்றுலாவில் பங்கு பற்றினர்
- 130 m நீளமுடைய சதுரவடிவக்காணிக்கு கம்பிவேலி அமைப்பதற்காக 10 m இடைவெளியிற்கு ஒரு சீமெந்துக் கம்பம் நாட்டுவதற்கு மொத்தம் எத்தனை கம்பங்கள் தேவை ?
- அரவிந்தனின் கைக்கடிகாரம் மணத்தியாலத்திற்கு 3 நிமிடம் பிந்தி ஓடியது. ரவியின் கைக்கடிகாரம் மணத்தியாலத்திற்கு 4 நிமிடம் முந்தி ஓடியது. குறித்த ஒரு தினம் காலை 6 மணிக்கு இருவரது கைக்கடிகாரங்களும் சரியான நேரத்தைக் காட்டின. அதே தினம் காலை அரவிந்தனின் கைக்கடிகாரம் 10.45 நேரத்தைக் காட்டும் போது ரவியின் கைக்கடிகாரம் என்ன நேரத்தைக் காட்டும் ?
- 200 மாணவர்களைக் கொண்ட குழு ஒன்றில் 120 மாணவர்கள் பொருளதாரத்தையும் 100 மாணவர்கள் சர்வதேசத் தொடர்புகளையும் கற்கின்றனர். மாணவர் ஒருவர் இவ்விரு பாடங்களிலும் குறைந்தபட்சம் ஒன்றையேனும் கற்க வேண்டுமெனின், சர்வதேசத் தொடர்புகளை மாத்திரம் கற்கும் மாணவர்களின் சதவீதம் யாது?
- 10 வருடங்களின் முன் சராசரி 7 வயதுடைய மூன்று குழந்தைகள் இருந்தன. அதே வருடம் 5 வயதுடைய குழந்தை இறந்ததாயின் தற்போதுள்ள குழந்தைகளின் சராசரி வயது யாது?
- தனது உதவியாளனைவிட மும்மடங்கு வேகமாகப் பணியாற்றும் ஒரு மனிதன் ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கின்றான். எனின் 6 உதவியாளர்கள் மட்டும் செய்தால் அதனை முடிக்க அவர்களுக்கு எத்தனை நாட்கள் எடுக்கும் ?
- முந்தை நாளுக்கு முற்பட்ட நாள் ஞாயிற்றுக்கிழமை எனின் நாளை மறுதினத்துக்கு அடுத்த நாள் என்ன கிழமை ?
- ஒவ்வொரு மணத்தியாலத்தின் ஆரம்பத்திலும் ஒரு குரங்கானது 30 மீற்றர் ஏறி ஒவ்வொரு மணத்தியாலத்திலும் 20 மீற்றர் கீழே சறுக்குகிறது. காலை 7 மணிக்கு அக்குரங்கு ஏறத் தொடங்கினால் நிலத்திலிருந்து 120 மீற்றர் உயரத்திலுள்ள புள்ளியைப் போய்த்தொட எத்தனை மணி ஆகும்.
- 60 % ஆண்களைக் கொண்ட வகுப்பறையில் பெண்களிலும் பார்க்க 6 ஆண்கள் தொகை அதிகமானதாயின் மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கை யாது?
- Mr.கணேஷின் சகோதரி லதா ஆவார் லதாவிற்குச் சம எண்ணிக்கையான சதோதரிகளும் சகோதரர்களும் உள்ளனர். கணேஷின் சகோதரர்களின் எண்ணிக்கையின் இருமடங்கான சகேதரிகள் உண்டு. இக்குடும்பத்தில் ஆண் பிள்ளைகளினதும் பெண் பிள்ளைகளினதும் எண்ணிக்கைகளைத் தனித்தனியாகக் காண்க.