
புனித துல் - ஹிஜ்ஜஹ் மாதத் திற்கான தலை பிறை கடந்த புதன் பின்னேரம் ஆரம்பமானதை அடுத்து இலங்கையில் அரபா தினம் எதிர்வரும் 26ம் திகதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் ஸுப்ஹு தொழுகையுடன் தக்பீர் ஆரம்பித்து எதிர்வரும் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகையுடன் நிறைவடையும் எனவும் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் 9 நாட்களிலும் நோன்பு நோற்பது ஸுன்னத் ஆகும். அதிலும் 9ம் நாளான 26ம் திகதி வெள்ளி அன்று நோன்பிருப்பது அதி விசேட ஸுன்னத் ஆகும்.
இவ்வாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதேவேளை புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் சனிக்கிழமை 27ம் திகதி அனுஷ்டிப்பதென கடந்த 16ம் திகதி நடைபெற்ற தலைப்பிறை பார்க்கும் மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஷரீஆ கவுன்சில், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பிரதிநிதிகள், மேமன் சங்கத்தின் உலமாக்கள், தக்கியா ஸாவியாக்களின் நிர்வாகிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !