
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் ஐ.நா சபையில் உள்ள 193 நாடுகளில் குறைந்தது 129 நாடுகளின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், ரிவாண்டாவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன.
மற்ற நாடுகளான அவுஸ்திரேலியாவுக்கு 140 வாக்குகளும், அர்ஜெண்டினாவுக்கு 182 வாக்குகளும் கிடைத்தன. இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின்போது தென்கொரியா 149 வாக்குகளும், லக்சம்பர்க் 131 வாக்குகளும் பெற்று வென்றன.
ஆசிய-பசிபிக் பகுதி நாடான தென்கொரியா, அப்பகுதியிலுள்ள மற்ற நாடுகளான பூடான் மற்றும் கம்போடியா நாடுகளை வென்றது. இதேபோல் மேற்கு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க், மற்றொரு நாடான பின்லாந்தை முந்தியது.
மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு குழுவில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
மற்ற 10 நாடுகள் நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் ஐந்து நாடுகள் ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக் கொள்ளப்படும். அதன்படி தற்போது சேர்க்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளும், வரும் ஜனவரி மாதம் முதல், அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !