
செவ்வாயில் உலாவுவதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக இணையத்தில் கசிந்துள்ள தகவல்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாசாவின் கியூரியோசிட்டி செய்மதி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தடம் பதித்தது முதல் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் சில சர்ச்சைக்குரிய ஆதாரங்களை இணையவாசிகள் தொகுத்துள்ளனர்.
1. செவ்வாய் விலங்கு

இணையத்தில் வெளியான செவ்வாய்க்கிரகம் பற்றிய புகைப்படங்களில் யூடியூப் பாவணையாளர் ஒருவரால் விலங்கு போன்ற இத்தோற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. வான்வெளியில் மிதந்தவாறு நான்கு செய்மதிகள்

தரையிலிருந்து ஓரளவு உயரமாக நான்கு புள்ளிகள் Stephen Hannard என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இப்புகைப்படங்கள் மீது புதிய Filter களை பயன்படுத்தில் அந்நான்கு புள்ளிகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளார். இவை UFO அல்லது வேறு ஏதும் மர்ம பொருட்களாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இது செய்மதியின் சிசிடி கமெராவில் உள்ள பழுதடைந்த பிக்ஸல்களின் தொழிற்பாடே இப்படி புள்ளி புள்ளியாக காட்டுகிறது என மறுப்பவர்களும் உண்டு.
3. வீடியோவில் அசையும் வெள்ளை நிற புள்ளி

டைம்லேப்ஸ் முறையில் செவ்வாயில் இறங்கிய செய்மதி எடுத்த புகைப்பட தொகுப்பில் இரண்டு வெள்ளை நிற சிறிய புள்ளிகள் அசைவதை காணலாம். ஆனால் இது போட்டோஷாப் செய்யப்பட்டது என மறுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
4. புகைபப்டமொன்றில் தோன்றும் சப்பாத்து, விலங்கு, விரல்


குறித்த புகைப்படமொன்றில் சப்பாது, விலங்கு, விரல் என எதுவாகவும் ஊகிக்க கூடிய உருவ அமைப்பு தெரிவதாகவும் இது ஒளி வேறுபாட்டினால் இப்படி தோன்றுகிறதா, அல்லது உண்மையில் ஒரு வேற்றுக்கிரக வாசியின் உடையதா என்பதில் சந்தேகம் நிலவுதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Read more: செவ்வாயில் வேற்றுக்கிரக வாசிகள் : கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படங்களி� http://tamil4.com/world/north-america/2112.html#ixzz258NMF8Fu
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !