
பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த ரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்டடுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவியாளராகவும் இருந்து வந்தவர் திருச்சி வேலுச்சாமி. மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர். இது அவருக்கு அரசியலில் பெரும் பலம் சேர்த்தது. அதுவே பலவீனமாகவும் ஆகிப்போனது.
சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என பண்முகம் கொண்ட அவர் விடுதலைப்புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி, புதிய பார்வை ஆசிரியர் (சசிகலா) நடராஜன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் நல்ல நெருக்கம் கொண்டவர்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று அப்போது தகவல் பரவியபோது, அதை மறுத்து மாற்றுக் கருத்து வெளியிட்டவர் திருச்சி வேலுச்சாமி. இதனால் அவரை பலரும் உற்று நோக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணி பற்றி முழு விவரப் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !