
ஏற்கனவே திருமணமான இராணுவ மேஜர் ஒருவர் பேஸ் புக்கில் அறிமுகமான முகம் தெரியாத காதல் நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்த சம்பவம் கடந்த நாட்களில் மாத்தறையில் இடம்பெற்று உள்ளது.
இவரின் பெயர் நளின் சம்பத் குமார. வயது 37. இரு குழந்தைகளின் தந்தை. கையடக்கத் தொலைபேசிக்கு தவறுதலாக வந்து நின்ற ஒரு அழைப்பு, பேஸ் புக் ஆகியவற்றின் மூலம் இவருக்கு கல்விப் பொது தராதர சாதாரண தரம் படிக்கின்ற மாணவி ஒருத்தியுடன் முகம் தெரியாத காதல் ஏற்பட்டது. பின்பு இருவருக்கும் இடையிலான காதல் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. ஆனால் இவர்கள் நேரில் ஒருபோதும் சந்திக்கவில்லை.
திருமணம் ஆனவர் என்பதையும் இரு குழந்தைகளின் தகப்பன் என்பதையும் பேஸ் புக் காதலிக்கு மறைத்து இருந்தார் மேஜர். பேஸ் புக் காதலியிடம் திருமணத்துக்கு கோரி இருந்தார்.
வழமைக்கு மாறான இக்காதல் குறித்து சில நாட்களுக்கு முன்புதான் பெற்றோருக்கு சொல்லி இருந்தார் இம்மாணவி. மேஜரின் பெயர், அலுவலகம் ஆகியன குறித்த விபரங்களை பெற்றோருக்கு கூறி இருக்கின்றார். இருவரும் நேருக்கு நேர் ஒருபோதும் சந்தித்து இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மாணவியின் தகப்பனுக்கு மகளின் முகம் தெரியாத காதல் குறித்து பயம் ஏற்பட்டது. மேஜர் குறித்து விசாரித்து முழு விபரங்களையும் தெரிந்து கொண்டார்.
மேஜரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொண்ட விடயங்களை மகளுக்கு இவர் உடனடியாக சொல்லவில்லை. மேயரை சந்திப்பு ஒன்றுக்கு அழைத்தார்.
பேஸ் புக் காதலியின் தகப்பனால் சந்திப்புக்கு ஒழுங்கு பண்ணப்பட்ட இடத்துக்கு நேற்று முன் தினம் கப் வாகனம் ஒன்றில் மேஜர் சென்றார்.
பேஸ் புக் காதலியை முதன் முதல் கண்டார். பேஸ் புக் காதலியின் பெற்றோரும் வந்திருந்தனர். ஏற்கனவே திருமணம் ஆனவருக்கு மகளை ஒரு போதும் கொடுக்கவே மாட்டார் என்று மாணவியின் தகப்பன் உறுதியாக மேஜருக்கு சொன்னார்.
இனி மேல் காதலின் பெயரால் தொடர்பு வைக்க வேண்டாம், எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று மேஜரிடம் பேஸ் புக் காதலியும் அழுத்தம் திருத்தமாக கூறினார். பின் இந்த இடத்தில் இருந்து மாணவி போய் விட்டார்.
இராணுவ மேஜர் பெரிதும் ஏமாற்றம் அடைந்து போனார். இவர் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து வந்திருக்கவில்லை. இதனால் பேரதிர்ச்சியும் அடைந்து விட்டார்.
பேஸ் புக் காதலியின் தகப்பனையும் அழைத்துக் கொண்டு கப் வாகனத்தில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் கைக்குண்டு வெடிப்புச் சத்தம் ஒன்று பெரிதாக கேட்டது. உடலில் கைக்குண்டை வெடிக்க வைத்து மேஜர் தற்கொலை செய்து விட்டார். ஹக்மீமன பிரதான வீதியில் இத்தற்கொலை இடம்பெற்றது. வெடிப்புச் சம்பவத்தை அறிய ஏராளமான பொதுமக்கள் வந்து குவிந்தார்கள். இராணுவம் வரவழைக்கப்பட்டது. வேறு ஒரு கைக்குண்டை வெடிக்கத் தவறிய நிலையில் இராணுவத்தினர் மீட்டு செயல் இழக்க வைத்தார்கள்.




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !