
இப் புகைப்படக் கண்காட்சியில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாஸ்டர் சிவலிங்கம், மற்றும் பிரதேச செயலாளர் தவராஜா, கல்விப் பணிப்பாளர்களான திருமதி சுபா சக்கரவர்த்தி, கே.பாஸ்கரன், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்.
இக் கண்காட்சி, 21,22,23 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00மணிவரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வோரது விஞ்ஞான அறிவை விஸ்தரிக்கும் நோக்கோடு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்துடன், மட்டக்களப்பில் நிறுவவுள்ள விஞ்ஞான வள நிலையத்துக்கான தேவைகளை நிறைவுசெய்வதற்காக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் எனப் பல்துறை சார்ந்த மேம்பட்ட அறிவாளர்கள் இச் சங்கத்தில் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நூற்றுக்கணக்கான, உயிரினங்கள், இயற்கை வளங்கள், மிருகங்கள், பறவைகள், மட்டக்களப்பின் முக்கியத்துவம் மிக்க இயற்கைப்பிரதேசங்கள் எனப் பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !