
“லிபியாவின் பென்காசி நகரில் உள்ள துணைத் தூதரகத்துக்கு விஜயம் செய்தபோதே, லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கொல்லப்பட்டார்” என்று அல்-ஜசீராவின் சுலைமன் இட்ரிசி தமது பிரேக்கிங் நியூஸில் தெரிவித்திருந்தார். அநேக அமெரிக்க சேனல்கள், கொல்லப்பட்டவர் ஸ்டேட் டிபார்ட்மென்டை சேர்ந்தவர் என்பதற்கு மேல் தகவல் ஏதும் கிடையாது என்று தெரிவித்துக் கொண்டிருந்தன.
லிபிய ஊடகத் தகவலின்படி, கொல்லப்பட்டது அமெரிக்க தூதர்தான் என்பது முதலில் உறுதி செய்யப்பட்டது.
தற்போது அல்-ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்க தூதரும், அவருடன் இருந்த இரு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் மற்றொரு அமெரிக்க தூதரக அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். அவர் எந்த நாட்டுப் பிரஜை என்பது தெரியவில்லை.
லிபிய ஊடகத் தகவல்களின்படி, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் உடனடியாகவே பென்காசி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பென்காசியில் இருந்து தலைநகர் ட்ரிபோலிக்கும், அங்கிருந்து ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
தற்போது புதிதாக கிடைத்துள்ள தகவலின்படி, அமெரிக்க தூதர், தூதரகத்தில் இருந்தபோது கொல்லப்பட்டிருக்கவில்லை. தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானபோது, அவர் அங்கிருந்து பாதுகாவலர்களுடன் வெளியேறினார். தூதரகத்தை விட்டு அவர்களது கார் வெளியேறியபோதே, அந்த கார் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளானது.
காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடைபெற்றது, செப்.11-ம் தேதி என்பதால், 9/11 தாக்குதல் 11-வது ஆண்டு நிறைவுக்காக நடத்தப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !