
சச்சினின் பெயரில் ஏற்கெனவே ஏராளமான பேஸ்புக் பக்கங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்டவை. இப்போதுதான் சச்சின் பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
டுவிட்டரில் 2010ஆம் ஆண்டிலேயே சச்சின் இணைந்துவிட்டார். இப்போது வரை அவரை சுமார் 27 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தான் பேஸ்புக்கில் இணைந்ததை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்பான காணொளிகள், கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான புகைப்படங்கள் ஆகியவை சச்சினின் பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை ரசிகர்களுடன் சச்சின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் இணையத்தளத்திற்குhttp://www.facebook.com/SachinTendulkar இதன் மூலம் செல்லலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !