
யானைக்கால் நோயை இல்லாமல் செய்த நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளதென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
யானைக்கால் நோய் இலங்கைக்கு பாரிய சவாலாக விளங்கியதாகவும் நோயை கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால் யானைக்கால் நோயை நாட்டில் இருந்து விரட்டமுடிந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதும் யானைக்கால் நோய் இலங்கையில் இருந்து முழுமையாக விரட்டப்பட்டுள்ளதாக என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு தற்போது கணிப்பை மேற்கொண்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கணிப்பிற்கு அமெரிக்க வொஷிங்டன் பல்கலைகழகத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !