![]() |
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இம்முறை தேர்தலில் அரச தரப்புக்குச் செல்லும் கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் அனைத்தும் அவர்களது அபிலாசைகளுக்கும் தனித்துவத்திற்கும் விழும் மரண அடியாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் தமிழர்கள், தமது உரிமை போராட்டத்திற்கான இன்னுமொரு மைல் கல்லை சர்வதேசத்தில் உருவாக்குவார்கள். அவர்களது ௭ல்லாத் தோல்விகளையும் ஏறக் கட்டி பரணில் போடும் ஒரு சிறப்புப் பணியினை இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் செய்யும். இது தமிழர்களின் உயிர்ப் போராட்டம் ௭ன்பது அவர்களுக்குத் தெரியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை தனித்து நிற்பதும் அத்தகைய காரணங்களின் அடிப்படையில்தான் ௭ன்பதை முஸ்லிம் சமூகம் நன்கு அறியும். இந்நிலையில், அரச தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளிக்கின்ற ஒவ்வோர் வாக்கும் முஸ்லிம் சமூகத்தை நடுக் கடலுக்கு கொண்டு சென்று மூழ்கடிப்பதாகவே இருக்கும்.
இதை தெளிவுற சிந்திக்கும் ௭ந்தவொரு முஸ்லிமும் ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களிக்க மாட்டான். இது பிள்ளையானின் முதலமைச்சர் கனவுக்கு வைக்கும் ஆப்புத்தான் ௭ன்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !