.jpg)
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின் கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் பூதவுடலுக்கு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை 4 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி பொலிஸார், படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்ட நிலையில், நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !