![]() |
கலிபோர்னியாவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரிலேயே இந்நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
இந்நிகழ்வில் கூகுள் தனது புதிய உற்பத்திகள், முக்கிய அறிவிப்புகள் போன்றவற்றை மேற்கொள்வது வழமை.
இவ்வருடத்திற்கான நிகழ்வு இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகியது. 3 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்திற்கான நிகழ்வில் பல புதிய சாதனங்கள், தொழில்நுட்ப வசதிகள் எனப் பல அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றில் சில முக்கியமான அறிவிப்புகள் இதோ!
Android 4.1 (Jelly Bean)

அண்ட்ரோய்ட் என்றால் தற்காலத்தில் அறியாதவர்கள் இல்லையெனலாம். ஸ்மார்ட் போன் உலகில் அதிக நபர்கள் உபயோகிக்கும் இயங்குதளங்களில் ஒன்றான இதன் புதிய தொகுப்பினை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஜெலி பீன் Jelly Bean எனப் பெயரிட்டுள்ளனர். வெர்சன் 4.1 ஆன ஜெலி பீன் இதன் முந்தைய வெர்சனான ஐஸ்கிரீம் சென்விச் 4 ஐ விடப் பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
இதன் குறிப்பிடத்தக்க வசதிகள் சில :
Triple buffering in the graphics pipeline
Enhanced accessibility
Bi-directional text and other language support
User-installable keyboard maps
Expandable notifications
Automatically resizable app widgets
Multichannel audio
Bluetooth data transfer for Android Beam
Offline voice dictation
Improved voice search
Improved camera app
High resolution contact photos
Google Nexus 7

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் முதல் டெப்லட் Nexus 7 ஆகும்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இது வெளியிடப்பட்டுள்ளது. Asus நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இது Quad-core Tegra3 processor இனால் இயங்குகின்றது.
8GB ($199) , 16GB ($249) ஆகிய இரண்டு மெமரி வகைகளில் வெளியிடப்படுகிறது.
அண்ட்ரோய்ட் ஜெலிபீன் 4.1 தொழில் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் இது 1GB RAM ஐக் கொண்டுள்ளது.
எனினும் கெமாராவைக் கொண்டிராமை பெரிய குறைபாடாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் வீடியோ அழைப்பினை மேற்கொள்ளும் பொருட்டு Front கெமராவினை மட்டும் கொண்டுள்ளது.
எனினும் 3 ஜி மூலம் இயங்கும் மாதிரி இதுவரை அறிமுகப்படுத்தப்படாமை ஒரு குறைபாடாகத் தெரிகின்ற போதிலும் குறைந்த விலையுடன் ஒப்பிடும் போது அது பெரிதாகத் தோன்றவில்லை.
Screen 7" 1280x800 HD Display, Scratch Resistant Corning glass
OS Android 4.1 Jelly Bean
Processor Quad-core Tegra 3 Processor
Price 8GB $199 , 16GB $249
Size 198.5 x 120 x 10.45mm
Weight 340 grams
RAM 1GB
Camera 1.2MP Front Facing Camera
Others Microphone, NFC (Android Beam), Accelerometer, GPS, Magnatometer, Gyroscope, Volume Controls
Nexus Q
நெக்ஸஸ் கியூ 'Nexus Q' என்ற புதிய மீடியா பிளேயர் சாதனமும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் Android மொபைல் அல்லது டெப்லட்களில் இருந்து உங்கள் ஓடியோ மற்றும் வீடியோவை synchronization செய்து வீட்டில் உள்ள பெரிய திரையில் Google Play மற்றும் Youtube மென்பொருட்களின் உதவியுடன் அனைத்து வீடியோ மற்றும் ஓடியோக்களை உங்கள் வீட்டில் பெரிய திரையில் பார்த்தும் கேட்டும் மகிழலாம். இதன் விலை $299.
இவற்றைத்தவிர மேலும் பல அறிவிப்புகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
Google Project Glass

ஸ்மார்ட்போன் மற்றும் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) ஊடாக மேற்கொள்ளக்கூடிய கூகுளின் புரட்சிகரமான திட்டமும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலைதான் சற்று அதிகம் $1,500 டொலர்களாகும்.
Google+ App for Tablets
டெப்லட் சாதனங்களில் உபயோகப்படுத்த ஏதுவாக கூகுள் பிளஸ் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.
Google+ Events
பேஸ்புக்கில் உள்ளதைப் போல கூகுள் பிளசில் 'Events' வசதியை புதிதாக சேர்த்துள்ளனர்.
Google Drive version 2
கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் டிரைவ் என்ற புதிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம். இதில் சில புதிய மாற்றங்களை செய்துள்ளது கூகுள். முக்கியமாக கூகுள் டிரைவில் உபயோகிக்க பல புதிய மென்பொருட்களை அறிமுகப் படுத்தியுள்ளனர். இதற்கு குரோம் வெப்ஸ்டோர் பகுதியில் கூகுள் டிரைவ் என்ற தனிப் பிரிவை உருவாக்கி உள்ளனர்.
Google Docs Offline
ஓப்லைனிலும் கூகுள் டொக்ஸினை உபயோகிக்கும் வசதி.
Google Drive for iOS
அப்பிளின் ஐ.ஓ.எஸ் மூலம் இயங்கும் சாதனங்களுக்கும் கூகுள் டிரைவ் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Chrome for iOS
அப்பிளின் ஐ.ஓ.எஸ் மூலம் இயங்கும் சாதனங்களுக்கான குரோம் உலாவியும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Offline Maps for Android
கூகுள் மெப் மொபைல்களில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மென்பொருளாகும். இனி இந்த மென்பொருள் இணையம் இல்லாமலும் இயங்கும். சுமார் 150 நாடுகளுக்கான வரைபடங்களை இணையம் இல்லாமலே உபயோகிக்கலாம்.
New Youtube Mobile App
மொபைலில் யூடியூப் தளத்தை சுலபமாகவும் வேகமாகவும் உபயோகிக்கும் வகையில் புதிய மென்பொருள் அண்ட்ரோய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.. _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !