![]() |
குறிப்பாக பாவனையாளர் 'புரொபைல்' இன் தோற்றத்தில் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை, 'டைம் லைன்' எனப்படும் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆனால் தற்போது பேஸ்புக் கொண்டுவந்துள்ள மாற்றமானது பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
அதாவது எங்களது புரொபைலில் நாம் குறிப்பிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியினை பேஸ்புக் மாற்றியுள்ளது.

உங்களது மின்னஞ்சல் சேவை வழங்குநருக்குப் பதிலாக @facebook.com என்ற பேஸ்புக்கின் மின்னஞ்சல் சேவையின் முகவரியினை பேஸ்புக் மாற்றியுள்ளது.
பேஸ்புக் அதன் மின்னஞ்சல் சேவையினை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. எனினும் அச்சேவை பெரிய வரவேற்பினைப் பெறவில்லை.
எனினும் தனது மின்னஞ்சல் சேவையினை ஊக்குவிக்கும் பொருட்டு பாவனையாளர்கள் தங்கள் பேஸ்புக் புரொபைலில் குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரியினை மாற்றியுள்ளது.
பாவனையாளர்களின் அனுமதியைப் பெறாமல், அறிவிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளாமலேயே இம்மாற்றத்தினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.
ஆனால் டைம்லைன் தோற்றத்தினைக் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே இம்மாற்றமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பேஸ்புக் மின்னஞ்சல் முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினால் அது உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள மெசேஜுக்குள் வந்து சேரும்.
HOW TO CHANGE YOUR EMAIL ADDRESS BACK
1. Go into the 'About' section of your profile
2. Where the email address is displayed, click 'Edit'
3. Click on the circle along from the @facebook.com address
4. Change setting to 'hidden from timeline'
5. Click on circle next to other email address and choose 'shown on timeline'
6. Hit save at the bottom of the edit box
இதன்மூலம் பேஸ்புக் பாவனையாளர்கள் மின்னஞ்சல் சேவைக்கும் அதனை சார்ந்திருப்பதை அந்நிறுவனம் விரும்புவதாகவும் அதனாலேயே இம்மாற்றத்தினை ஏற்படுத்தியிருப்பதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் இதனூடாக தனது தளத்தில் செலவு செய்யும் நேரத்தினையும், பிரவேசிக்கும் தடவைகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதுடன் இவற்றின் மூலமாக விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தினைப் பேஸ்புக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
பேஸ்புக் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்ததையடுத்து தனது வருவாயை பெருக்கும் பல மாற்றங்களை உத்தேசித்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதில் ஒன்றாக இதனையும் கருத முடிகின்றது.
உங்களது பழைய மின்னஞ்சல் முகவரியே புரொபைலில் தோன்ற விரும்பினால் அதனை நீங்கள் மாற்றவும் முடியும்.
அதற்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !