![]() |
வவுனியா தெற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளில் பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக பலராலும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதால் வேண்டத்தகாத சில செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் மற்றைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது பாட நேரங்களில் மாணவர்கள் இன்ரநெற் பார்க்கக்கூடிய வசதிகள் காணப்படுவதால் அவற்றைப் பயன்படுத்தி குழுவாக வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போது கைத்தொலைபேசியில் உரையாடுவதிலேயே தமது கூடுதலான நேரத்தினை செலவிடுவதாகவும் இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களினாலும் சமூக ஆர்வலர்களாலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !