இலங்கை புறக்கணிப்பு குழு கொடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
நீல்கிரிஸ் அங்காடியில் இலங்கை திண் பண்டங்கள் வியாபாரம் செய்யப்படுவதை
அறிந்து இன்று சென்னை , ஜவஹர் நகர் நில்கிரிஸ் சிறப்பங்காடி முன் இலங்கை
புறக்கணிப்பு குறித்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்தோம். துண்டறிக்கைகளை விநியோகம் செய்தோம்.
பல வாடிக்கை யாளர்களுக்கு எது இலங்கை தயாரிப்புகள் என்றே தெரியவில்லை.
அதனால் அவர்களுக்கு இலங்கை தயாரிப்பான பிஸ்கட் , இனிப்புகள், கேக்குகள்
முதலியவற்றை அடையாளம் காட்டினோம். இப்படியான இலங்கை தயாரிப்புகள் இந்த
நீல்கிரிஸ் சிறப்பங்காடியில் விற்கப்படுகிறது , அதனால் அவற்றை
வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்.
பலரும் இனி நிச்சயம் இத்தகைய பொருகளை வாங்க மாட்டோம் என்று வாக்குறுதி
அளித்தனர். பலரும் இலங்கை தயருப்புகளின் பெயர்களை குறித்துக் கொண்டனர். இதை
பற்றி முன்பே தெரிந்திருந்தால் வாங்கி இருக்க மாட்டோம் என்று பல வாடிக்கை
யாளர்கள் கூறினார்.
முடிவாக கடையின் மேலாளரை சந்தித்து நாம் கொண்டு வந்த துண்டறிக்கை கொடுத்து
இனி இந்த இலங்கை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டோம்.
அவரும் நிச்சயம் இதை கடையின் உரிமையாளரிடம் சொல்கிறேன் என வாக்குறுதி
கொடுத்தார். விரைவில் இந்த பொருட்கள் அங்கிருந்து நீக்கப்படும் என்று
நம்புகிறோம்.
சென்னை உள்ள பல கடைகளுக்கு சென்று இலங்கை தயாரிப்புகளை
வாங்காதீர்கள் , விற்காதீர்கள் என்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளோம் .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !