விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள் தயாரிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிலோன் மற்றும் ஜப்னா என இந்தப் படங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளி வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.
நீண்ட கால மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதே வேளை புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்கள் திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சூஜித் சிர்கர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !