![]() |
இத்தகவலை அந்நாட்டுக் கடற்படைத் தொழில்நுட்பப்பிரிவின் பிரதி பிரதானியான (deputy navy chief in charge of technical affairs) அட்மிரல் அபாஸ் சாமினி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
தாம் அணு நீர்மூழ்கிகளை உருவாக்கும் பணியின் ஆரம்பகட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான அணுத்தொழில் நுட்பத்தினை உருவாக்கி வைத்துள்ளதாகவும், அதனை நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான வல்லமை மற்றும் உரிமையை தாம் கொண்டுள்ளதாகவும் அபாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதன் அணுச்செறிவாக்கல் நடவடிக்கை மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பு நடவடிக்கைகளை முடக்கும் பொருட்டு பல மேற்குலக நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறான நிலையிலேயே நீர்மூழ்கி தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !