![]() |
அப்போது அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா-சீனா கூட்டாக இராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
அதுதொடர்பாக ஜனாதிபதி புட்டின் சீன தலைவர்களுடன் விவாதித்தார். நேற்று அவர் சீன துணை ஜனாதிபதி ஜிங்பிங்குடன் பேச்சு நடத்தினார். அப்போது சீனா-ரஷ்யா கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்வது பற்றி முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின்போது சீன அதிபர் ஹீஜின் டாவ்வுடன் பேச்சு நடத்தவும் புட்டின் திட்டமிட்டுள்ளார்.
புட்டின் கூறுகையில், ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக இராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே சோதனை முறையில் மஞ்சள் கடல் பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டு இராணுவ பயிற்சி நீடிக்கும் என்றார்.
ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும். சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மஞ்சள் கடல் அமைந்துள்ளது. இங்கு 6 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் நீர் மூழ்கி கப்பல் மூலம் நடைபெறும் தாக்குதலை எதிர்கொள்வது, கடத்தப்பட்ட கப்பல்களை மீட்பது பற்றியும் பயிற்சி நடந்தது.
இந்தப் போர் பயிற்சியில் சீனா சார்பில் 16 பேர் கப்பல்கள், 2 நீர் மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. ரஷ்யா 4 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்தது. அடுத்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா-ரஷ்யா கூட்டு இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார். _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !