![]() |
இந்நிலையில் பேஸ்புக்கின் புகழ் இன்னும் 8 வருடங்கள் வரை மட்டுமே காணப்படுமெனவும் அதன் பின்னர் அது மங்கிப்போய்விடுமெனவும் பிரபல முதலீட்டு ஆய்வாளரும், 'அயன் ஃபயர்' முதலீட்டு நிறுவனத்தின் ஸ்தாபகருமான எரிக் ஜெக்ஸன் எதிர்வுகூறியுள்ளார்.
ஒரு காலத்தில் யாஹூ நிறுவனம் இணையத்தில் எவ்வாறு உச்சத்தில் இருந்து தற்போது சரிந்து வீழ்ந்துள்ளதோ அதே போன்று பேஸ்புக்கும் வீழ்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர் எதிர்வு கூறியுள்ளார்.
யாஹூ எவ்வாறு புதிய நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் திணறி வருகின்றதோ அதேபோன்ற நிலையே பேஸ்புக்கிற்கு ஏற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் நவீன 'மொபைல் வெப்' (mobile web) எனவும் தெரிவித்துள்ள எரிக் ஜெக்ஸன் இதற்குள் விளம்பரங்களை எவ்வாறு புகுத்துவது தொடர்பில் பேஸ்புக் தடுமாறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் புதிய அப்ளிகேசன்கள் மூலம் மொபைல் மூலமான பேஸ்புக்கினை ஊக்குவித்தபோதும் அவற்றை இலாபகரமானதாக மாற்றிக்கொள்ள அதனால் முடியாமல் போயுள்ளதாகவும் ஜெக்ஸன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய நிறுவனங்களை ஜெக்ஸன் 3 ஆகப் பிரித்துக்காட்டியுள்ளார்.
1. வெப் போர்டல்ஸ் (web portals) உதாரணம் யாஹூ
2. சோசல் சைட்ஸ் ( social sites) உதாரணம் பேஸ்புக்
3. மொபைல் நிறுவனங்கள் (mobile companies ) உதாரணம் தற்போது அப்ளிகேசன்களை உருவாக்கும் நிறுவனங்கள்.
இவற்றில் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு நிறுவனங்கள் பிரபலமாக இருக்குமென குறிப்பிட்டுள்ள ஜெக்ஸன் அந்நிறுவங்கள் அடுத்த காலகட்டத்திற்குள் பிரவேசிக்கும் போது மாற்றத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் வெப் போர்டல்ஸ் காலப்பகுதிக்குள் வெற்றிநடைபோட்ட யாஹூவினால் சோசல் சைட்ஸ் காலப்பகுதிக்குள் வெற்றிகரமாகனதாக தன்னை இசைவாக்கிக்கொள்ள முடியவில்லையெனவும் அதேபோல் சோசல் சைட்ஸ் காலப்பகுதியில் வெற்றிநடைபோடும் பேஸ்புக்கினால் அப்ளிகேசன் காலப்பகுதிக்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் ஜெக்ஸன் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பணம் கையிருப்பில் இருந்தாலும், எவ்வளவு திறமையானவர்கள் இருந்தாலும் அடுத்த காலப்பகுதிக்குள் நுழைவது கடினமெனவும் ஜெக்ஸன் அடித்துக்கூறுகின்றார்.
கூகுளும் இதற்கு சிறந்த உதாரணமெனவும் கூகுளினால் சோசல் சைட்ஸ் காலப்பகுதியில் வெற்றி நடைபோட முடியவில்லையெனவும் எரிக்ஸன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !