![]() |
பங்கு விற்பனை பெறுமானத்தினூடாக "பேஸ்புக்' இணையத்தளத்தின் பெறுமதி 106 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அவரது திருமணம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் 28ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்க் ஷூக்கர்பேர்க்கிற்கும், பிறிசில்லா சானுக்கும் (27 வயது) அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் போலோ அல்டோ நகரிலுள்ள ஷூக்கர்பேர்க்கின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.
பிறிஸ்சில்வா கடந்த திங்கட்கிழமை மருத்துவத்துறையில் தனது பட்டத்தை பெற்றார்.
திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் தாம் ஷூக்கர்பேர்க்கினதும் பிறிஸ்சில்லாவின் திருமண வைபவத்திற்கு அல்லாது பிறிஸ்சில்லா பட்டமேற்றிருப்பதைக் கொண்டாடவே வந்திருப்பதாக ஆரம்பத்தில் கருதியிருந்தனர்.
திருமணத்தின் போது சாதாரண சிவப்புக் கல் பதிக்கப்பட்ட திருமண மோதிரத்தை ஷூக்கர்பேர்க் பிறிஸ்சில்லாவுக்கு அணிவித்தார்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !