.jpg)
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அன்புமணி இரா. நாகலிங்கம், நாவலாசிரியர் ந. பாலேஸ்வரி, செய்யித் ஹஸன் மௌலானா வட மாகாணத்தை சேர்ந்த சிற்றிதழ் சிற்பி சிவசரவணபவன், கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி, ஓவியர் ஆசை இராசையா மலையகத்தை சேர்ந்த மூத்த கவிஞர் சக்தீ பால-ஐயா ஆகியோரே கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த மாநாட்டின் முன்னோடி நிகழ்ச்சியாக ஜூன் மாதம் முதலாம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடத்தும் பாரதியார் விழா முழுநாள் விழாவாக இடம்பெறுவுள்ளது.
இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த அறிஞர்களும் இலங்கையை சேர்ந்த அறிஞர்களும் இணைந்து நடத்தும் இலக்கிய கலைநிகழ்வுகள் இடம்பெறும்.
மறுநாள் ஜுன் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமாகும் உலக இலக்கிய மாநாடு "தமிழ் இலக்கியமும் சமூகமும் - இன்றும் நாளையும்" என்ற தொனிப்பொருளில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறும்.
சங்க தலைவர் மு. கதிர்காமநாதனின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்வுகளாக காலை 8 மணிமுதல் 9.30 வரை பேராளர் பதிவு இடம்பெறுவதனை தொடர்ந்து இடம்பெறும் அங்குரார்ப்பண விழாவினை திரு, திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதியினர் மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பார்கள். தொடர்ந்து அருணந்தி ஆரூரனின் தமிழ் வாழ்த்து இடம்பெறும் வரவேற்புரையை இலக்கிய பணிச் செயலாளர் நிகழ்த்துவார்.
தலைமையுரையை தொடந்து பேராசிரியர் தில்லைநாதனின் வாழ்த்துரை இடம்பெறும். மாநாட்டு சிறப்பு மலரின் வெளியிட்டு உரையை பேராசிரியர் சபா ஜெயராசா நிகழ்த்த, மலரின் முதற் பிரதியை பொறியியலாளர் சண். குகவரதன் பெற்றுக்கொள்வார். மாநாட்டின் ஆதார சுருதி உரையை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் நிகழ்த்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.இரகுபதி பால ஸ்ரீதரன் நன்றியுரையுடன் காலை நிகழ்வுகள் நிறைவுபெறும்.
முதல் நாள் ஆய்வரங்குகள் பகல் 1.30 மணி முதல் 4.45 மணி வரை இடம்பெறும். தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. மாநாட்டின் இரண்டாம் மூன்றாம் நாட்கள் தினமும் ஆய்வரங்குகள் காலை 8.30 மணி முதல் 4.45 மணி வரை இடம்பெறுவதுடன் தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறும்.
பலரது வேண்டுகோளுக்கிணங்க பேராளர் விண்ணப்ப முடிவு திகதி இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுளதாகவும் இலக்கிய பணிச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்தார்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !