![]() |
நமது மொபைல் சாதனங்களினூடாக ஒளிப்படங்களைப் பெற்று அவற்றை சமூகவலைத்தளங்களிலோ அல்லது இன்ஸ்டகிரேமின் தளத்திலோ அவற்றை பகிர்வதற்கு( Share) இம்மென்பொருள் உதவுகின்றது.
இது ஓர் இலவச மென்பொருள் ஆகும்.
குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடைந்த இம்மென்பொருளை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு பேஸ்புக் நிறுவனம் அண்மையில் கையகப்படுத்தியது.
இந்நிலையில் இன்ஸ்டகிரேம் போன்ற வசதிகளைக்கொண்ட அப்ளிகேசனை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.
அப்பிளின் ஐ போன்களுக்கென இப்பிரத்தியேக அப்ளிகேசன் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அப்ளிகேசனின் பெயர் 'கெமரா' ஆகும்.
இதன்மூலம் பல புகைப்படங்களை ஒரே நேரத்தில், கெப்சன்களுடன் பகிரமுடிவதுடன், நண்பர்களை டெக் செய்யவும் முடியும்.

மேலும் வித்தியாசமான பில்டர்கள் மூலம் புகைப்படங்களின் தோற்றத்தினையும் மாற்றமுடியும்.
இதேபோன்ற வசதிகளை இன்ஸ்டகிரேமும் கொண்டுள்ளது.
இவ் அப்ளிகேசனின் பிரதான நோக்கம் பேஸ்புக்கின் ஊடாகப் புகைப்படங்களைப் பகிரச்செய்வதாகும்.
ஆனால் இன்ஸ்டகிராமின் ஊடாக பேஸ்புக் மட்டுமன்றி டுவிட்டர், தம்லர் மற்றும் போர்ஸ்குயார் ஆகிய சமூகவலையமைப்புகளின் ஊடாகவும் பகிரமுடியும்.
பொதுவாக பேஸ்புக் தான் விலைகொடுத்து வாங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சேவைகளை சிறிது நாட்களில் நிறுத்திவிடுவது வழமை.
ஆனால் இன்ஸ்டகிரேம் இதற்கு விதிவிலக்கு. காரணம் அச்சேவையினை பேஸ்புக் இதுவரை நிறுத்தவில்லை.
இதனை நிறுத்தும் எண்ணமில்லை என பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க்கும் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்ஸ்டக்கிரேமினை பேஸ்புக் கொள்வனவு செய்துள்ளபோதிலும் சில சட்டரீதியான காரணிகளால் பேஸ்புக் முழுமையாக இன்ஸ்டகிரேமினை கையகப்படுத்த குறைந்தபட்சம் 12 மாதங்கள் தேவைப்படும்.
எனினும் பேஸ்புக் 'கெமரா' எனும் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளமையானது அது இன்ஸ்டகிரேம் சேவையினை நிறுத்துவதற்கு முன்னோட்டம் பார்க்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.
பேஸ்புக், கூகுள், மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வரும் போட்டி நிறுவனங்களைக் கையகப்படுத்துவதும் பின்னர் அச்சேவையினை நிறுத்திவிடுவதும் வழக்கம்.
போட்டி நிறுவனங்களை வெற்றிகொள்வதற்கு பல நிறுவனங்கள் இத்தகைய தந்திரோபாயங்களைக் கையாள்கின்றன.
பொதுவாக பேஸ்புக் மற்றைய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கான காரணம் அதில் கடமைபுரியும் திறமையான ஊழியர்களைத் தம்பக்கம் இழுப்பதே என ஷூக்கர் பேர்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஸ்டகிரேம் சேவை நிறுத்தப்படுமா இல்லையா என?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !