![]() |
பௌதீகவியலாளர்கள் சக்திவாய்ந்த கணனிகளைப் பயன்படுத்தி மட்டுமே கணிப்பீடு செய்யக் கூடியதாக இருந்த இயக்கவியல் அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டிற்கு சௌரியா ரோய் என்ற இந்த மாணவன் தீர்வு கண்டுள்ளான். 350 வருடங்களுக்கும் மேலாகக் கண்டுபிடிக்க முடியாது குழப்பமடைந்திருந்த புதிருக்கே இந்த மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான்.
இந்த மாணவனுக்கு அபார திறமைசாலி, விற்பன்னன் என்ற புகழ் கிடைத்திருக்கிறது. சேர் ஐசாக் நியூட்டனால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு சௌரியா ரோய் விடை கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த மாணவனின் கண்டுபிடிப்புகள் மூலம் விஞ்ஞானிகள் வீசப்படும் பந்தின் பயணப் பாதையை இப்போது கணிப்பீடு செய்ய முடியும்.
உதாரணமாக சுவர் ஒன்றின் மீது வீசப்பட்ட பந்து சுவரில் பட்டு எவ்வாறு திரும்பிவரும் என்று எதிர்வு கூறமுடியும் என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ட்டென் பல்கலைக்கழகத்திற்கு தனது பாடசாலையிலிருந்து மேற்கொண்ட விஜயத்தின்போதே இந்தப்பிரச்சினைகள் பற்றி சௌரியா அறிந்து கொண்டார். அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இந்தப் பிரச்சினைக்கு தங்களால் தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
'ஏன் முடியாது" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். தீர்வு காண முடியாது இருக்கும் என்று நான் நம்பியிருக்கவில்லை என்று அந்த மாணவன் கூறியுள்ளான். இது ஒரு பள்ளி மாணவனின் வெகுளித்தனமென நான் நினைக்கிறேன்.
6 வயதாக இருக்கும் போதே சிக்கலான சமன்பாடுகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்க அவன் ஆரம்பித்து விட்டான். அதனால் தான் அபார திறமைசாலி என்று அவன் கூறுகிறான்.
பாடசாலையில் தான் சிறப்பாகச் செய்யும் வேறு விடயங்களும் உள்ளன. அவற்றில் உதைபந்தாட்டமும் ஒன்று என்று அந்த மாணவன் கூறுகிறான்.
கொல்கத்தாவிலிருந்து 4 வருடங்களுக்கு முன்னரே அவன் ஜேர்மனிக்குச் சென்றிருந்தான். அச்சமயம் அவனுக்கு ஜேர்மன் மொழி தெரியாது. இப்போது அந்த மொழி அவனுக்கு வெகுசரளமானதாக இருக்கின்றது.
அவனது புத்திக் கூர்மை வகுப்பில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு இருவகுப்புகளுக்கு வகுப்பேற்றப்பட்டுள்ளான். அத்துடன் தனது பரீட்சைகளுக்கும் உரியகாலத்துக்கு முன்பாகவே தோற்றுகிறான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !