
குமராட்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய அமைப்பாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் பேசியபோது,
’’இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். கொன்று குவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கு புதிதாக தமிழர் படை உருவாக்கப்படுகிறது. இவர்கள் ஜாதி உணர்வை தூண்டாமல் தமிழர்களின் நலனுக்காகவே பாடுபடுவார்கள்.
இந்தப் படை ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் நீதி அரசர்களின் ஆலோசனைப்படி அமைக்கப்படும்’’ என்றார் வேல்முருகன்.
வேல்முருகன், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்க
து
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !