
பாலமீன்மடுவில் உள்ள இக் கற்றை நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நகர திட்டமிடல் கற்கை நிலையத்தினருடன் சுற்றாடல் திட்டமிடல் சேவைகள் நிறுவனம் இணைந்து இக் கலந்துரையாடலை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
இக்கலந்துரையாடலில், சிரேஸ்ர நகரத்திட்டமிடலாளர் பாலி விஜயரத்ன இத்திட்டம் தொடர்பான விளக்கத்தினை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ், அமெரிக்க தூதரக அதிகாரி நியாம்பி யூஓங், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாநகர சபை பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் சிவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த திட்ட விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு கோட்டையினை காலாசார நிலையமாக மாற்றினால் மாவட்ட செயலகம் எவ்வாறு செயற்பட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விளக்கமளித்த மேலதிக அரசாங்க அதிபர், மட்டக்களப்பு கச்சேரியை அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்கியதாக வேறு இடம் ஒன்றுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதற்கு திராய்மடு உட்பட பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனாலும் திராய்மடு பிரதேசத்துக்கு மாற்றுவதில் சிலர் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இங்கு கருத்துத்தெரிவித்த பாலி விஜயரத்ன இயற்கை பாராம்பரியங்கள் பிரச்சினைக்குட்படாதவாறு மட்டக்களப்பினைத் தான் புனரமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !