![]() |
கடந்த 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொன்சேகா, இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.
இந்நிலையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டதையடுத்து, இன்று விடுதலை செய்யப்பட்ட பொன்சேகா, தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை வரவேற்பதற்கு ஏராளமான ஆதரவாளர்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் திரண்டிருந்தனர். __
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !