சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்ய இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக நடுநிலையாளராகச் செயற்படுபவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், சரத் பொன்சேகா விடுவிக்கப்படுவார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ்வுடன், ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தற்போது பிரித்தானியா சென்றுள்ள டிரான் அலஸ் நாடு திரும்பியதும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சரத் பொன்சேகா ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டால் அதற்கு சர்வதேச அழுத்தம் காரணம் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திப்பதற்கு முன்னதாக சரத் பொன்சேகாவின் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகா விடுதலை குறித்து அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !