
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ´ஸ்பாட் பிக்சிங்´ சூதாட்டம் நடைபெறுவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வெளிநாட்டு அணித் தலைவர் உள்ளிட்ட சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய தொலைக்காட்சி ஒன்று புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீரர்கள் சூதாட்டம் தொடர்பாக பேசுவது குறித்த வீடியோ ஆதாரங்களை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் உள்ளூரை சேர்ந்த 5 வீரர்கள் இதில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று உள்ள வீரர் ஸ்ரீவத்சவா. இவர் ஐ.பி.எல். போட்டியில் நோபால் வீச இந்திய ரூ.10 லட்சம் கேட்டுள்ளார்.
விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத உள்ளூர் வீரர்கள் அதிகபட்சமாக இந்திய ரூ.30 லட்சம் தான் பெற முடியும்.
ஆனால் ஸ்ரீவத்சவாவுக்கு கறுப்பு பணமாக இந்திய ரூ.70 லட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதுபோல வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த பெண்களையும் பயன்படுத்த அவர் உதவி புரிந்துள்ளார்.
இடதுகை வேகப்பந்து வீரரான ஸ்ரீவத்சவாவுக்கு 5-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
இவர் ஐ.சி.எல். போட்டியில் ஆடியவர். இதுபோல புனே அணியில் இடம் பெற்றுள்ள உள்ளூர் வீரரான மோனிஸ் மிஸ்ராவுக்கு அதன் உரிமையாளர்கள் இந்திய ரூ.1.45 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளனர். இதில் இந்திய ரூ.1 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்து உள்ளனர்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் சுசிந்திரா. இவர் கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டியில் தொலைக்காட்சி நிருபரின் விருப்பதிற்கு ஏற்ப முறையற்ற பந்து வீசியுள்ளார். அந்த நிருபரிடம் இந்திய ரூ.60 லட்சம் கொடுத்தால் அணி மாற தயார் என்று கூறியுள்ளார்.
தற்போதைய ஐ.பி.எல். தொடரில் ஒரு அணிக்கு தலைவராக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் “ஸ்பாட் பிக்சிங்” சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட ´ஸ்பாட் பிக்சிங்´ பரபரப்பான தகவலால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் கூறும் போது, ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் விதிமுறைகளை மீறினாலோ அல்லது ஊழலில் ஈடுபட்டாலோ அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்த ´ஸ்பாட் பிக்சிங்´ புகார் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை நடத்துகிறது. கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் மும்பையில் இன்று 15ம் திகதி நடக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !