இதற்கிணங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அரச தரப்பு முக்கியஸ்தொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்காக கிழக்கு மாகாண சபை ஜுன் மாதத்தில் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. முதலில் மாவட்ட ரீதியாகவும் பின்னர் மூன்று மாவட்டங்களையும் இணைத்து இக்கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம்ஜயந்த, டலஸ் அழகப்பெரும, ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !