
குறிப்பாக கிளிநொச்சியின் மலையாளபுரம், யூனியன்குளம், பன்னங்கண்டி, போன்ற பிரதேசங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் பலரின் வீடுகள் தொடர் மழையினால் ஊறியுள்ளதாகவும் இதனால் வீடுகளில் வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள் அமைப்புக்கள் இந்த தொடர் மழையினால் மீள குடியேறி தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் மக்களே பெருமளவு பாதிப்புக்களை கடந்த மூன்று
மீள குடியேறி மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பெருபாலான மக்களுக்கு இன்றும் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் கிடைக்கபெறாமையினால் வெள்ளப்பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் மக்கள் மீள குடியேறிய நான்காவது வருடத்திலாவது தற்காலிக கொட்டில்களுக்கு விடைகொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீள்குடியேறிய போது ஒரு வருடத்திற்கு என நிறுவனங்களினால் அமைத்துக கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் மக்கள் மூன்று வருடங்களாக எவ்வாறு வாழமுடியும் எனவும் கேள்வி எழுப்புக்கின்றனர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !