
இம்மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களில் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, 'வேற்றுச் சமயநெறிகளை வெறுக்காத பண்பினை பல நாடுகளுக்கு எடுத்துச்சென்ற பெருமை தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்கு கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக்கொள்கைகளை வெறுக்காது மதித்தல் அவற்றை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்துக்குப் புகட்டிய சமயத்துக்குரியவன என்பது குறித்து நான் பெருமையடைகின்றேன். எதையும் வெறுக்காது மதிக்கவேண்டும் என்கிறகொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லாச் சமயங்களும் உண்மையானவையே என்று ஒப்புக்கொள்கின்றோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும், அனைத்துச் கமயங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டைவிட்டே விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடமளித்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையடைகின்றேன். உரோமானியரின் கொடுமையால் தங்கள் புனிதத் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடமே தென்னிந்தியாவுக்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல்மாபினர்களில் எஞ்சி நின்றவர்களை இதயமாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன். சிறந்த சொராஸ்டிரிய சமயத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலமளித்து இன்னும் பேணிக்காத்து வருகிற சமயத்துக்கு உரியவன் என்று பெருமை கொள்கின்றேன்.
என் அருமைச் சகோதரர்களே! எனது பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான கீதத்தின் ஒரு சில வரிகளை இங்கு, உங்களுக்குமுன் குறிப்பிட விரும்புகின்றேன்.
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமமாம் பான்மையியைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறிபலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகமிகச் சிறந்ததாகக் கருதக்கூடிய இப்பேரவை கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்துக்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். 'யார் எவ்வழியைப் பின்பற்றி என்னையடைய முயன்றாலும், நான் அவரை அடைவேன். பலரும் பல வழிகளில் முயல்கிறார்கள் எல்லா வழிகளும் இறுதியில் என்னையே அடைகின்றன.'
அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி இவை இந்த அழகிய உலகை நெடுநாளாய் இறுகப்பற்றியுள்ளன. வன்முறையை நிரப்பியுள்ளன. அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து நாகரிகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. அந்தப் பயங்கர பைசாகச் கொடூரச்செயல்கள் தோன்றாதிருப்பின் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர்நிலை எய்திருக்கும்.
ஆனால் அவற்றுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது இன்று காலையில் இந்தப்பேரவையின் தொடக்கத்தைக் குறிப்பிட ஒலித்த மங்கல மணி எல்லா மதவெறிகளுக்கும், வாளாலும் எழுதுகோலாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியடிக்கட்டும் என்று நான் ஆர்வமுடன் வேண்டுகின்றேன்.
(2) ஒரு சிறுகதை சொல்லப் போகின்றேன். 'நாம் ஒருவரையொருவர் வசைபாடுவதை நிறுத்தவேண்டும்' என்று இப்பொழுது பேசி முடித்த நாவன்மை படைத்த பேச்சாளர் கூறியதைக் கேட்டீர்கள். நமக்குள் இவ்வளவு மாறுபாடு இருப்பதைப்பற்றி அவர் வருத்தப்பட்டார். இந்த மாறுபாடுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்க, ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
தவளை ஒன்று ஒரு கிணற்றில் பல நாட்களாக வசித்து வந்தது. அந்தக் கிணற்றிலேயே பிறந்து அங்கேயே வளர்ந்தது அந்தச் சின்னஞ் சிறிய தவளை. அந்தத் தவளை கண்களை இழந்துவிட்டதா இல்லையா என்று சொல்வதற்கு நல்ல வேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை ஆனால் நம் கதையைப் பொறுத்தவரையில் அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அத்தவளை நாள்தோறும் நீரிலிருந்த புழு பூச்சிகளையும், கிருமிகளையும் வெகு சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு நம் தற்காலக்கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அத்தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்துவந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்து விட்டது.
'நீ எங்கிருந்து வந்திருக்கின்றாய்?'
'கடலிலிருந்து'
'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்கு தாவிக் குதித்தது கிணற்றுத்தவளை.
'நண்பா! இந்தச் சின்னக்கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது.
'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'
'சரி சரி உன் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்கமுடியாது. கண்டிப்பாக அதைவிடப் பெரிதாக இருக்கமுடியாது அவன் சொல்வது அப்பட்டமான பொய்: அவனை வெளியே விரட்டு!' என்று கூறிவிட்டது அந்தக் கிணற்றுத்தவளை. இத்தனை காலமாக இருந்துள்ள கஷ;டம் இதுதான். நான் ஓர் இந்து நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்துகொண்டு, உலகம் முழுவதும் என் சிறிய கிணறுதான் என்று நினைக்கின்றேன். கிறிஸ்தவன் தன் சமயமாகிய சிறு கிணற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு உலகம் முழுவதும் தன் கிணறுதான் என்று நினைக்கின்றான். அவ்வாறே முகம்மதியனும் தன் சமயமாகிய சிறு கிணற்றில் உட்கார்ந்துகொண்டு அதுதான் முழு உலகம் என்று நினைக்கின்றான். நம்முடைய இச்சிறிய உலகின் வேலிகளைத் தகர்த்தெறிய அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில் உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.
(3) வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே இன்றும் தோன்றி உலகத்தில் நிலைத்து நிற்கும் சமயங்கள் மூன்று. அவை இந்து சமயம், யூதசமயம், சொராஸ்டிரிய சமயம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும் இன்றும் நிலைத்து இருந்து தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. ஆனால் யூதசமயம் கிறிஸ்தவ சமயத்தை ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமன்றி அனைத்தையும் வெற்றிகொண்டதும், தான் ஈன்றதுமான கிறிஸ்தவ சமயத்தால் பிறந்த இடத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு விட்டதுடன், தங்கள் பெருஞ் சிறப்புக்குரிய சமயத்தைப் பற்றி நினைவுபடுத்த ஒரு சில பார்சிக்காரர்கள் மட்டுமே இன்று வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக பல கிளைச்சமயங்கள் தோன்றின. அவை வைதிக சமயத்தின் அடித்தளத்தையே உலுக்கியது போலத் தோன்றின. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்தோடு மீண்டும் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்ளுகிறதோ அதே மாதிரி மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்கியதும் அந்தக் கிளைச்சமயங்கள் எல்லாம் ஒன்றாகிமிகப்பெரியதாய்ச் சமயத்தோடு இரண்டறக் கலந்துவிட்டன.
அறிவியலின் தற்காலக் கண்டுபிடிப்புகள்கூட எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ. அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்ம ஞானக் கொள்கைகள் பல்வேறு புராணக் கதைகளைக் கொண்ட உருவ வழிபாடு என்னும் கீழான கருத்துக்கள், பௌத்தர்களுடைய ஆர்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்துக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது.
'அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவையனைத்தும் ஒன்று சேரும் பொது மையம்தான் எங்கே இருக்கிறது?' என்ற வினா எழுகிறது. பார்ப்பதற்குப் பயனற்ற மாறுபாடுகளாகத் தோன்றும் இவை அனைத்தும் இணைந்து நிற்கும் அடித்தளம் தான் எங்கிருக்கிறது? இந்த வினாவுக்குத்தான் நான் இப்பொழுது விடையளிக்க முயலப் போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் சமயத்தைப் பெற்றுள்ளனர் வேதத்திற்குத் துவக்கமும் இல்லை முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா. அது அபத்தம் என்று இந்தச் சபையிலுள்ள உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வௌ;வேறு மக்களால் வௌ;வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதம். புவிஈர்ப்பு விதி அதுகண்டறியப்படுமுன்னரே இருந்தது. மனிதஇனம் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அதே மாதிரித்தான் ஆன்மீக உலகத்து விதிகளும் உள்ளன. ஓர் ஆன்மாவுக்கும் இன்னும் தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதிநெறி உறவுகள் அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷpகள் எனப்படுவர். பூரணத்துவம் அடைந்தவர்கள்என்று அவர்களை நாங்கள் போற்றுகின்றோம். அவர்களில் மிகமிகச் சிறந்தவர்களில் சிலர்மங்கையர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விதிகள் அவை விதிகளாதலால் முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு தொடக்கமும் முடிவும் இல்லாததே என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் உறுதிப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் பிரபஞ்சத்தில் ஒன்றுமே அறிந்திராத ஒரு காலம் இருந்ததானால் இப்பொழுது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சிலகாலம் ஒடுக்க நிலையிலும் சிலகாலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது கடவுள் மாறக்கூடிய தன்மையர் என்றாகிறது. மாறக்கூடிய பொருள்கள் யாவும் கூட்டுப் பொருட்கள். கூட்டுப் பொருட்கள் மாறுதலை அடையவேண்டும். அதாவது அழிய வேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் என்றும் இருந்ததில்லை.
இதை ஓர் உவமையால் விளக்கலாம் என்று நினைக்கின்றேன். படைப்பவனும் தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள் கடவுள் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அதன் சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து பல ஒழுங்கு முறைகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி சிறிதுகாலம் அப்படியே இருந்து பின் அழிகின்றன. இதைத்தான் அந்தணச் சிறுவன் தினம் ஓதுகிறான். 'சூரியர்களையும், சந்திரனையும், பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும், சந்திரர்களையும் போன்றே இறைவன் படைத்தான்' என்று.
இங்கு நான் நிற்கிறேன் என் கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப்பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப்பற்றிய எண்ணந்தான் தோன்றுகிறது. அப்படியானால் அப்பொருள்களின் மொத்த உருவத்தினைத் தான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மர் நான் உடல் அன்று. உடல் அழிந்து விடும். ஆனால் நான் அழியமாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போகவேண்டும். ஆன்மா படைக்கப்பட்டதாயின் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறந்து, உடல் வளத்தோடும், வனப்போடும், மன வலிமையோடும் வசதிகள் அனைத்தும் பெற்று வாழ்கிறார்கள். மற்றும் சிலர் துயர நிலையில் பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும், நொண்டியாகவும் பிறக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே பிறந்து வாழ்க்கை முழுவதும் இழுபறி நிலையிலேயே உழன்று காலம் கடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால் நேர்மையும், கருணையுமுள்ள கடவுள் ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும், இன்னொருவரை துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? துன்பப்படுகிறவர்கள் அடுத்த பிறவியில் இன்பமடைவார்கள் என்று கூறுவது பொருந்தாது நேர்மையும் கருணையும் கொண்ட அந்தக் கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே கடவுள் என்கிற படைப்பாளர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை. எல்லா வல்லமையுள்ள ஒருவர் கொடிய கட்டளைகள் இடுகிறார் என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. அப்படியானால் ஒருவன் இன்புறுதற்கோ துன்புறுவதற்கோ உரிய காரணங்கள் அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள் ஒருவனுடைய உடல் உள்ளம் ஆகியவற்றின் தன்மைகள் அவனுடைய பரம்பரையிலிருந்து வருவது என்று காரணம் காட்டப்படுகிறதல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணைகோடுகள் உள்ளன. ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நம்முடைய நிலைக்குக் காரணமென்றால் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்பலம் ஒரே ஒரு பொருள்தான் இருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. அதே மாதிரி சடப்பொருளும் ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் இங்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு தனிப்பட்ட உடலில் ஒரு தனிப்பட்ட மனம் ஒரு தனிப்பட்ட முறையில் தான் இயங்க முடியும் என்பதை மட்டும் தான் அது காட்டுகிறது. கடந்தகால விளைவுகளின் காரணமாக, ஆன்மாவுக்குச் சில தனிப்பட்ட வாசனைகள் ஏற்படுகின்றன. தனிப்பட்ட வாசனைகளோடு கூடிய ஆன்மா குண ஒற்றுமை விதிமுறைகளுக்கிணங்க(டுயற ழுக யுககinவைல) அந்த உடலில் பிறந்தால் அந்த வாசனைகளை வெளிப்படுத்த முடியுமோ அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஒத்தது ஏனெனில் அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் தன்மைகளை விளக்குவதற்கு அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று வருகிறது. அத்தன்மைகள் இப்பிறவியில் பெறப்பட்டவை அல்லனவாதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஏன் எனக்குப் போன பிறப்பின் செயல்கள் ஒன்றும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும்.
இப்போது நான் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறேன். அது என் தாய்மொழியன்று. உண்மையில் என் தாய்மொழிச் சொற்கள் ஒன்றும் என் அறிவுத்தளத்தில் இப்பொழுது இல்லை. ஆனால் அச்சொற்களைப் பேச முயல்வேனானால் அவை உடனே விரைந்து வந்து விடும். மனக் கடலின் மேற்பரப்பு மட்டுமே அறிவுத்தளம் என்றும் ஆழத்திலே தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்றும் அது காட்டுகிறது. முயலுங்கள், கஷ;டப்படுங்கள் அவை வெளிப்படும் பழம் பிறப்பு உங்களுக்குப் புலனாகிறது.
இது நேரான நிரூபிக்கப்பட்ட சான்று நிரூபிக்கப்படுவதுதான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று உலகத்துக்கு ரிஷpகள் விடுக்கும் அறை கூவல் இதுவே நினைவுக் கடலில் ஆழத்தைக் கிளறிவிடும் இரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்கள் நிச்சயமாகப்பழம் பிறப்பின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!.
எனவே தான் ஒரு ஆன்மா என்பதை இந்து நம்புகிறான் அதனை வான்பிளக்காது, நெருப்பு எரிக்காது, நீர் கரைக்காது, காற்று உலர்த்தாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத ஒரு வட்டம். அதன் மையம் உடலில் பொருந்தியுள்ளது. இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச்செல்வதே மரணம் என்ற உண்மையை இந்து நம்புகிறான். சடப்பொருளின் நிலைகளுக்கு ஆன்மா கட்டுப்பட்டதன்று. தூய்மையானது. முழுமையானது ஆனால் ஏதோ காரணத்தினால் அது சடத்துடன் இணைந்து விட்டது அது தன்னை ஒரு சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமானதும், நிறைவானதும், தூய்மையானதுமான அவ்வான்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையானதுமான ஆன்மா. தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? 'இத்தகைய வினாவுக்கு இங்கு இடமில்லை' என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தனையாளர்கள் இதற்கு இப்படி விடை காண விரும்புகிறார்கள். பாதி முழுமை பெற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சில இருப்பதாகக்கூறி மீதி விஷயங்களைப் பெரிய விஞ்ஞானச் சொற்களைக் கொண்;டு மழுப்புகிறார்கள்.
பெயர் இடுவது விளக்கமாகி விடாது. வினா அப்படியே நான் இருக்கும். எப்படிப் பாதி முழுமையாய் ஆக முடியும்? தூய்மையும், நிறைவும் உள்ள பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேணும் மாற்றிக் கொள்ள முடியும்?
ஆனால் இந்து நேர்மையானவன் அவன் குதர்க்கவாதம் செய்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. கேள்விக்கு ஆண்டையோடு பதில் சொல்லும் துணிவு அவனுக்குண்டு. அவன் பதில் இதுதான். 'எனக்குத் தெரியாது ஆன்மா. தான் பூரணமற்றது என்றும் சடலத்தோடு இணைக்கப்பட்டு அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப்பற்றி நினைக்க ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.'
ஆனால் உண்மை என்னவோ, அதுதான் ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என ஒரு இந்துவும் விளக்க முயல்வதில்லை. அது கடவுளின் சித்தம் எனப் பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று கூறுகிறானே அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
ஆகவே மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்றும் மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலேயாகும். கடந்த காலவினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பிறப்பு, இறப்புக்கு இறப்பு ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ்நிலைக்கு தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.
ஆனால் இங்கு மற்றொரு வினா எழுகிறது. சூறாவளியில் சிக்கி ஒருகணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தின் கீழ் உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒருசிறு படகா மனிதன்? கடுஞ்சீற்றமும், படுவேகமும், தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு அழிந்து போகும் சக்தியற்ற உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை. விதவையின் கண்ணீரைக் கண்டும் அனாதையின் கம்பலையைக் கேட்டும் சற்றும் நிற்காது தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக்கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட வீட்டில் பூச்சியைப் போன்றவனா மனிதன்? இதனை நினைக்கும்போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இதுதான் இயற்கையின் நியதி. 'நம்பிக்கையே கிடையாதா?' நம்பிக்கை இழந்த இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் இதுதான். அக்குரல் அருளாளரின் அரியாசனத்தை அடைந்ததும் நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் வெளித் தோன்றின. அவை ஒரு வேதகாலத்து முனிவரைச் சினந்தெழச் செய்ய. அவர் உலகின் முன்னே எழுந்து நின்று எக்காளத் தொனியுடன் பின்வரும் நற்செய்தியை முழக்கினார். 'ஓ! அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர்கோணங்களில் வாழும் நீங்களும் கேளுங்கள். அனைத்து இருளையும் அனைத்து மாயையும் கடந்த அந்த ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்ததால் தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.'
'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான எவ்வளவு நம்பிக்கையூட்டும் பெயர்! அருமைச் சகோதரர்களே! இந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள் அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! இந்து உங்களைப் பாவிகள் என்று அழைக்க மறுக்கிறான். நீங்கள் ஆண்டவனின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். தூய்மையானவர்கள், பூரணமானவர்கள்! வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கமாகும். சிங்கங்களே! வீறுகொண்டு எழுங்கள். நீங்கள் அழிவுறாத ஆன்மாக்கள்! சுதந்திரமான இறையருள் பெற்ற முடிவற்ற ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல. சடப்பொருள் உங்கள் பணியாள்; நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற வீதிகளின் ஒரு பயங்கர தொகுதியை வேதங்கள் எடுத்துக் கூறவில்லை; காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச்சாலையை அறிவிக்கவில்லை ஆனால் இவ்வீதிகளுக்கெல்லாம் அப்பால் சடம், விசை ஆகிய இவற்றின் ஒவ்வொரு சிறு துகளின் உள்ளும், புறமும் ஒருவன் இருக்கிறான் என்றுதான் கூறுகின்றன. 'அவன் கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடை போடுகிறது.'
அவன் இயல்புதான் என்ன?
அவன் எங்கும் நிறைந்தவன். புனிதமானவன், உருவமற்றவன், எல்லாம் வல்லவன், பேரருளாளன்.
'அப்பனும் நீ, அன்னையும் நீ. அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்மும் நீ அண்ணலே! எமக்கு வலிமை தந்தருள்வாயாக! புவனத்தின் சுமையைத் தாங்குபவள் நீ. இவ்வாழ்க்கையின் சுமையைத்தாங்க நீ எனக்கு அருள் செய்வாயாக!' வேத காலத்து ரிஷpகள் இப்படிப் பாடினார்கள்.
அவனை எப்படி வணங்குவது! அன்பு வழியே அவனை வணங்கும் வழி. இம்மையிலும் மறுமையியலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்குரியவன் என்று அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே கடவுள் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப்போற்றும் ஸ்ரீகிருஷ;ணர் அதை எப்படி வளர்த்தார். மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப்போல வாழவேண்டுமென்று ஸ்ரீPகிருஷ;ணர் சொன்னார். தாமரை தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அதே மாதிரி மனிதன் வாழ வேண்டும். இதயம் இறைவன்பால் இருக்க கைகள் வேலையைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
இம்மைப் பயனோ. மறுமைப் பயனோ கருதி இறைவனிடம் அன்பு செலுத்தினாலும் அவனிடம் அன்புக்காகவே அன்பு செலுத்துவதுதான் மிகவும் சிறந்தது. பிரார்த்தனை கூறுகிறது, 'பெருமானே! எனக்குச் செல்வமோ. செல்வர்களோ, கல்வியோ வேண்டாம். அதுதான் உன்சித்தமானால் நான் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன் மீது அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் எனக்கு அருள்செய்' என்று.
ஸ்ரீ கிருஷ;ணரின் சீடர்களில் ஒருவர் இந்தியச் சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ;டிரர். அவர் பகைவர்களால் நாட்டினின்றும் விரட்டப்பட்டு தம் மனைவியோடு இமாலயப் பிரதேசத்தில் ஒரு காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி அரசனைப் பார்த்து 'மனிதருக்குள் மாசுறுவற்று விளங்கும் நீர் ஏன் இத்தகைய துன்பத்தில் துவளவேண்டும்?' என்று கேட்டாள். உடனே யுதிஷடிரர் சொன்னார், 'அரசியே! இதோ இந்த இமயமலை எவ்வளவு எழிலோடும் மாட்சியோடும் காட்சியளிக்கிறது. பார்த்தாயா? அதன் மீது நான் அன்பு கொண்டிருக்கின்றேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. ஆனால் அழகும் கம்பீரமும் நிறைந்த காட்சிகளில் என் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதைப் போலவே கடவுளிடம் நான் காதல் கொண்டிருக்கிறேன். அவரே அனைத்து அழகுக்கும் கம்பீரத்துக்கும் மூலகாரணம். என் அன்புக்குரிய ஒரே ஒருவர் அவரே ஆவார். அவரிடம் ஈடுபாடு கொள்வது எனக்கு இயல்பானது. ஆதலால் நான் அவரை விரும்புகிறேன். நான் வேறெதுவும் வேண்டவில்லை. அவர் விருப்பம்போல் அவர் என்னை எங்கு வேண்டுமானாலும் விடட்டும். அன்புக்காகவே நான் அவரிடம் அன்பு செலுத்துகிறேன். நான் அன்பை விலை பேசுகிறவன் அல்லன்' என்று.
ஆன்மா தெய்வத்தன்மை வாய்ந்தது. அது சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்று வேதங்கள் கூறுகின்றன. பூரணத்துவம் பெற்றவுடன் இந்தக் கட்டுச் சிதறிவிடும். அதனால்தான் அந்த நிலையை மோட்சம், அதாவது விடுதலை. நிறைவுறாத நிலையினின்றும் விடுதலை, மரணத்தினின்றும் துன்பத்தினின்றும் விடுதலை என்று கூறுகிறார்கள்.
கடவுளின் கருணையால்தான் இந்தக்கட்டு அவிழும் தூய்மையுள்ளவர்களுக்குத்தான் அந்தக் கருணை கிட்டும். அவன் கருணையைப் பெறுவதற்கு தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது?
தூய்மையான உள்ளத்துக்கு அவன் காட்சி அளிக்கிறான். தூய்மையானவர், மாசற்றவர் இம்மையிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள் நிமிர்ந்து நேராகின்றன. ஐயங்கள் அறவே
இந்து வார்த்தைகளிலும், கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. சாதாரணப்புலன் நுகர்ச்சி வாழ்வுக்கு அப்பாற்பட்ட வாழ்வு எண்டென்றால் அதை அவன் நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா அவனுள் இருக்குமாயின் அருளே வடிவான எங்கும் நிறைந்த ஆன்மா ஒன்று இருக்குமாயின் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். அவன் அதனைக் காணவேண்டும். அதுதான் அவன் எல்லா ஐயங்களையும் அகற்றும் ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்துஞானி கொடுக்கக்கூடிய சிறந்த சான்று. ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டையோ அல்லது கொள்கையையோ நம்புவதற்காக போராட்டங்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவது இந்து சமயம் ஆகாது. மெய்ப்பொருளை உணர்ந்து தானே அதுவாய் மாறவேண்டும்.
அகல்கின்றன. காரண காரியம் என்ற பயங்கர விதி அவனை அணுகுவதில்லை.
இதுதான் இந்து சமயத்தின் மையமும் அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தாகும்.
இந்து வார்த்தைகளிலும், கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. சாதாரணப்புலன் நுகர்ச்சி வாழ்வுக்கு அப்பாற்பட்ட வாழ்வு உண்டென்றால் அதை அவன் நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா அவனுள் இருக்குமாயின் அருளே வடிவான எங்கும் நிறைந்த ஆன்மா ஒன்று இருக்குமாயின் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். அவன் அதனைக் காணவேண்டும். அதுதான் அவன் எல்லா ஐயங்களையும் அகற்றும் ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்துஞானி கொடுக்கக்கூடிய சிறந்த சான்று. ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டையோ அல்லது கொள்கையையோ நம்புவதற்காக போராட்டங்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவது இந்து சமயம் ஆகாது. மெய்ப்பொருளை உணர்ந்து தானே அதுவாய் மாறவேண்டும்.
இடைவிடாத முயற்சியின் மூலம் பூரணத்துவம் தெய்வத்தன்மை அடைவதும், ஆண்டவனை அணுகுவதும், அவனைக் காண்பதும், பிறகு பரமண்டலத்தில் உள்ள பிதா எப்படிப் பூரணமாக இருக்கிறாரோ அதே மாதிரி பூரணத்துவம் அடைவதும்தான் அவர்களுடைய நெறியின் நோக்கமாகும்.
பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அடைய வேண்டுமோ அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இது வரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப்போகிறார்கள். இந்தியாவிலுள்ள அனைத்துச் சமயப்பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள சமயம். பூரணத்துவம் எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்குக் குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது. ஆதலால் எப்பொழுதும் ஓர் ஆன்மா முழுமை நிலையையும், எல்லையற்ற நிலையையும் அடைகின்றதோ அப்பொழுதே அது பிரம்மத்துடன் ஒன்றாகி விட வேண்டும். பின்னர் அது எங்கும் நிறைந்த, எல்லாம் ஆன, எல்லாம் உணர்ந்த, பேரானந்த மயமான நிலையை எய்தி தான் பிரம்மம் என்பதை உணர்கிறது.
இது தான் என்கிற நிலையை இழந்து ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுகிறது என்று அடிக்கடி கூறப்படுவதைப் படித்துள்ளேன். காயம் படாதவன்தான் தழும்பைக்கண்டு நகைப்பான். நான் கூறுகிறேன் அது அம்மாதிரி அன்று. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால் இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் மிகுந்த இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப் பெருக இன்பத்தின் அளவும் பெருகி, பிரபஞ்ச உணர்வாகமாறி, குறிக்கோளாகியபேரின்பத்தின் முழுமை கிட்டும்.
ஆதலால் எல்லையற்று எங்கும் நிறைந்திருக்கின்ற அந்தத் தனித்தன்மையைப் பெறவேண்டுமாயின் துன்பம் நிறைந்த இந்த உடல் சிறை என்னும் தனித்தன்மை போகவேண்டும். நாம் உயிரோடு ஒன்றிவிடும் போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றிவிடும் போது தான் துன்பம் அகல முடியும். அறிவோடு ஒன்றிவிடும் போதுதான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்கு ஒத்த முடிவாகும். உடல் சார்ந்த தனித்தன்மை நிலை ஒரு மாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப்பொருளாகிய கடலில் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருளே என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. என் இன்னொரு பாகமான ஆன்மாவோ அத்வைதம்(ஒருமை) என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பதுதான் அறிவியல் முழுமையான ஒருமை நிலைக் கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடுகிறது. ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. எந்த மூலப்பொருளிலிருந்து எல்லாப் பொருள்களும் படைக்கப்படுகின்றனவோ. அதைக் கண்டுபிடித்ததும் வேதியியல்(ஊhழஅளைவசல) மேலே முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லாச் சக்திகளும் வெளிப்படுகின்றனவோ அதைக் கண்டறிந்ததும் இயற்பியல்(Phலளiஉள) நின்று விடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் மரணம் கடந்து நிற்கும் அந்த ஒரே மாறாத அடிப்படையான அதனைக் கண்டுபிடித்ததும் எந்த ஓர் ஆன்மாவிலிருந்து மற்ற எல்லா ஆன்மாக்களும் வெளிப்படுவது போன்ற மாயை உள்ளதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும் சமய விஞ்ஞானம் பூரணமாகிறது.
அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும். ஒடுங்கியிருப்பவை வெளிப்படுகின்றனவே அன்றி படைப்பு என்பதில்லை என்பதுதான் இன்றைய அறிவியல் கூற்று. இந்து தான் பல்லாண்டுகளாக எதனைத் தன் இதயத்தில் வைத்து நெஞ்சார நேசித்து வந்தாரோ. அந்த உண்மை உள்ளத்தில்
பதியக்கூடிய மொழியிலே தற்கால அறிவியல் முடிவுகளில் கண்ட மேலான ஆதார விளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறான்.
தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் பேதை மக்களின் சமயத்திற்கு வருவோம். பல தெய்வ வழிபாடு. இந்தியாவில் இல்லை என்று நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆலயங்களில் ஒருவர் அருகிலிருந்து கவனித்தால் வழிபடுகிறவர் அங்குள்ள திருவுவங்கள் எங்கும் நிறைந்தவர் என்று கூறுவதோடு கூட கடவுளின் அனைத்து குணங்களும் அவ்வுருவங்களுக்கு இருப்பதாகக்கூறி வழிபடுவதைக் காணலாம். அது பல தெய்வ வழிபாடாகாது. ஒரு முழு முதற் கடவுளை மட்டும் நம்பும் கோட்பாடு என்றும் அதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம் தான் கமழும்.' பெயர்கள் விளக்கங்களாகமாட்டா.
நான் சிறுவனாயிருந்தபோது கிறிஸ்தவ மதப்பாதிரியார் ஒருவர் ஒரு கூட்டத்தில் தம் சமயத்தைப்பற்றிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அப்போது பிரசாரகர் பல சுவையான செய்திகளை கூறிக்கொண்டே வந்து இடையில் 'நான் உங்கள் விக்கிரகத்தை கைத்தடியால் ஓங்கி ஓர் அடி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் உடனே எழுந்து, 'உங்கள் ஆண்டவரை நான் கீழ்த்தரமாய்த் திட்டினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்று கேட்டார். 'இறந்ததும் நீ தண்டிக்கப்படுவாய்' என்று பதிலளித்தார் பிரசாரகர். 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டித்துவிடும்.' என்றுதிருப்பிச் சொன்னார் இந்து!
'பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களில் ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடு இணையற்று விளங்குவோரை நான் காணும்பொழுது பாவத்தினின்றும் புனிதத்தன்மை பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
மூடநம்பிக்கை மனிதனின் பெரும்பகையாகும். ஆனால் மதவெறி அதைவிட மோசமானது. ஒரு கிறிஸ்தவன் ஏன் கோயிலுக்குச் செல்லுகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க ஆலயங்களில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங் கைகளில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே! சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல உள்ளத்திலே ஓர் உருவத்தோன்றமின்றி நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின்படி (டுயற யுளளழஉளைவழைn) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் தோற்றுவிக்கிறது. அதனால் தான் இந்து வழிபடும் பொழுது ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். அவனைக் கேட்டால்தான் வழிபடும் பரம்பொருளின் மீது தன் சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல. அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்குத் தெரியும். 'எங்கும் நிறைந்துள்ளது.' என்று சொல்லும் போது உலகினர் என்ன புரிந்து கொள்கிறார்கள்? அது ஒருசொல். சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பாப்பு உண்டா?
'எங்கும் நிறைந்தவர்' என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லும் போது விரிந்த வானையும், பரந்த வெளியையும் மட்டுமே நினைக்கின்றோம் அவ்வளவுதான்.
மன அமைப்பு விதிப்படி முடிவற்றது என்ற நம் கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறே தெய்வத் தன்மை பற்றிய நம் எண்ணத்தையும் கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல் அல்லது சிலுவை பற்றிய உருவத்துடன் இணைத்துப்பார்ப்பது தான் இயல்பானது. இந்துக்கள் புனிதம், தூய்மை, உண்மை எங்கும் நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும், தோற்றங்களுடனும் தொடர்புபடுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சமயம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புக் கொள்வது பிறருக்கு உதவி செய்வது என்று மட்டும் நினைப்பதால் கோவிலின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் உயர்வதில்லை. ஆனால் இந்துவின் சமயமோ இறைவனை உணர்வது: தெய்வத்தை உணர்ந்து மனிதனும் தெய்வமாவது. திருவுருவங்கள், கோயில்கள், நூல்கள் இவையெல்லாம் ஆன்மஞானத்தின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேறவேண்டும்.
அவன் எங்குமே நின்றுவிடக் கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலையாகும். மேல் நிலைக்கு வர முயன்று மனத்தால் பிரார்த்தனை செய்தல் அடுத்த உயர் நிலையாகும். ஆண்டவனை உணர்தல். அதாவது சாட்சாத்காரம் பெறுதல் தான் அனைத்திலும் மேலான நிலை' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே உறுதிப்பாடு கொண்டவர். விக்கிரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள். அவனை சூரியனும் விவரிக்க முடியாது. விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க வொண்ணாது. தீயும் அவனைத் தேர்ந்;துரைக்காது. அவை அனைத்தும் அவனருளால்தான் விளக்க முறுகின்றன.
ஆனால் அவன் யாருடைய வழிபாட்டையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை. அதன் ஆராதனை பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாதபடி என்று அவன் ஏற்றுக்கொள்கிறான். 'குழந்தை மனிதனின் தந்தை' குழந்தைப் பருவம் பாவமானது அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
ஓர் உருவத்தின் மூலமாக தெய்வீக நிலையை ஒருவன் உணரமுடிகிறது என்றால் அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை அவர் அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி மனிதன் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை. ஆனால் உண்மையிலிருந்து உண்மைக்கு அதாவது கீழ் நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்கு பயணம் செய்கிறேன்.
அவனுக்கு சடப்பொருள் வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரையில் உள்ள எல்லாச் சமயங்களும் பரம்பொருளைப்பற்றி உணர்வதற்காக மனித ஆன்மாவால் செய்யப்படும் பல முயற்சிகளேயாகும். ஒவ்வொன்றும் அது பிறந்த இடத்தையும், சூழலையும் பொறுத்தது. ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளங் கழுகைப் போன்றது. அது உயரச் செல்ல செல்ல மேலும் வலுவைப் பெற்று கடைசியில் அது ஒளி மிக்க சூரியனை அடைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். மற்ற சமயங்கள் எல்லாம் சில திட்டமான கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்த முயல்கின்றன. அவை சமுதாயத்துக்கு முன்னே ஒரே ஒரு சட்டையை வைத்து அந்த ஒரு சட்டைதான் ஜாக ஜான் ஹென்றி எல்லோருக்கும் பொருந்தவேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் உடலில் அணிய சட்டையின்றித்தான் இருக்க வேண்டும்.
ஆனால் சார்புப் பொருட்கள் மூலமே இறைவனை உணரவோ, நினைக்கவோ, பேசவோ முடியும். திருவுருவங்களும், சிலுவைகளும், பிறைகளும் வெறும் சின்னங்களே. ஆன்மீக கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்று இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பதன்று. ஆனால் தேவைப்படாதவர்கள் அது தவறு என்று கூற அவர்களுக்கு உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்ல வேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு அச்சத்துக்குரிய ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமுமல்ல. மாறாத ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு பக்குவப்படாதவர்களின் முயற்சியாகும் அது. இந்துக்களிடம் தவறுகள் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களைப் பலவாறு வருத்திக் கொள்வார்களேயன்றி அடுத்தவனின் கழுத்தை அறுக்கமாட்டார்கள். இந்துமதவெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல சூனியக்காரர்கள் கொளுத்தப்பட்டதற்கு எப்படி கிறிஸ்தவ சமயம் பொறுப்பில்லையோ. அதே மாதிரி இதற்கு இந்து சமயம் பொறுப்பல்ல.
ஆகவே இந்துவுக்கு உலகின் எல்லாச் சமயங்களும் பலவித நிலைகளிலும் உள்ள மாறுபட்ட ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்வதுபோலத் தான் சடப்பொருளான மனிதனிடத்திலிருந்து கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லாச் சமயங்களின் நோக்கமும் அவர்கள் எல்லாருக்கும் எழுச்சியை ஊட்டுகிறவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் இருக்கக் காரணம் என்ன? அவையனைத்தும் வெளித்தோற்றமே என்கின்றான் இந்து. பல்வேறு சூழ்நிலைகளிலும், பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் அதே உண்மையிலிருந்துதான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக்கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. தம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சிபுரிகிறது. கிருஷ;ணாவதாரத்தின் போது பகவான் இந்துக்களுக்குச் சொன்னார் 'முத்துமாலையின் நடுவே உள்ள கயிறு போன்று நான் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும், அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று. அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.
மற்றவர்கள் அல்ல என்று சமஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்துக்குச் சவால் விடுகிறேன். வியாசர் கூறுகிறார் 'நம்முடைய சாதிக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பால்கூட பூரண மனிதர்களைப் பார்க்கிறோம்' என்று. இன்னொன்று எண்ணங்களெல்லாம் கடவுளிடமே மையசக்தி கொண்ட இந்து. எப்படி சூனிய வாதம் பேசும் பௌத்தர்களையும், நாத்திக வாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?
பௌத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனைத் தெய்வமாக்க வேண்டும். என்னும் எல்லாச் சமயங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப்பார்த்தவன் தந்தையையும் பார்த்து விட்டான்.
சகோதர்களே! இந்துசமயக்கருத்துக்களின் சுருக்கம் இதுதான். தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால்; என்றாவது உலக சமயம் என்ற ஒன்று இருக்க வேண்டுமானால் அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அந்தச் சமயம் யாரைப்பற்றிப் பிரசாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ;ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ, பௌத்த மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ, முகம்மதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதோடு இன்னும் வளர்ச்சியடைய அகண்ட வெளியிடம் உள்ளதாக இருக்கும். விலங்கினங்களைப் போலவே உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியோடு வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும், உள்ளப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை எல்லோருக்கும் இடமளித்து தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத்தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாகும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய சமயத்தை உருவாக்குங்கள். எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகருடைய சபை பௌத்த சமய சபையாக இருந்தது. அக்பாது சபை இதைவிடச் சற்று நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் வீட்டுச் சபையாகவே இருந்தது. கடவுள் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறார் என்று உலகனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்க ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சௌராஸ்தர்களுக்கு அஹீராமஸ்தரவாகவும், பௌத்தர்களுக்குப் புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாபாகவும் கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் அமையும் ஆண்டவன் உங்கள் உன்னத்தமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து அதுமேற்கு நோக்கி நேரகச் சென்றது. அது சில பொழுது மங்கலமாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்பொழுது கிழக்குத் திசையிலே நான்போக நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியவே நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காது, அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் அகக் குறுக்குவழி என்று கண்டு பிடிக்காத உனக்குத்தான் சமரசக் கொடி பிடித்து நாகரிகப் படையின் முன்னனியிலே வெற்றி நடைபோடும் பெறும் பேறுகொடுத்து வைத்திருந்தது.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
இந்துமதத்தின் பெருமைகளை நாமும் அறிந்து, பிறரையும் அறியச் செய்வோம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !