(வாஞ்சியூர் தனஞ்சயன் )
மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் கல்லடிப் பாலத்தின் புதிய பால அமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் பாலத்தின் வேலைகளின் முக்கிய பகுதியான இடைத்தூண் நிஞவும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் போது, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் தர்மரெட்ணம், பெருமளவான பொறியியலாளர்கள், இப்பால நிர்மாணஷ வேலைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் பிரதம பொறியிலாளர் மற்றும் பொறியியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அதே நேரம் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற இவ் வேலைகளை பெருந் தொகையான மக்கள் பார்வையிட்டனர்.
கல்லடிப்பால வேலைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும் இது வரை பாலத்தின் வேலைகள் நிறைவு பெறவில்லை. ஆயினும். நேற்றைய தினம் பாலத்தின் மேலான இடைத்தூண் நிறுவப்பட்டமையானது பெரியதொரு நிகழ்வாக அனைத்து பொது மக்களாலும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம கல்லடிப்பாலம் திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் 20ஆம்திகதி இரவு 10 மணிமுதல ;மறுநாள் 5.30 வரையும் மூடப்படவுள்ளதாக நிர்மாணத்துறையினர் அறிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !