
முதலில் துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை எடுத்தது.121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிட்னி அணி, 12.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிட்னி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து களமிறங்கிய லயன்ஸ் அணி வீரர்கள் ஓட்டங்களை குவிக்க போராடினர். சிட்னி வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சில் தங்களது முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த லயன்ஸ், 3.3 ஓவர்கள் முடிவில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதனால் மேலும் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக, ஜீன் சைம்ஸ் மட்டும் நிலைத்து ஆடி 51 ஓட்டங்களை எடுத்தார்.
சிட்னி அணிசார்பாக நதன் மெக்கலம், ஹேஸ்லிவூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிட்னி

லயன்ஸ் வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும்
அடித்துநொறுக்கிய சிட்னி அணியினர் வெற்றியை நோக்கி பயணித்தனர். 11ஆவது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைச் சதமடித்தமடித்தார் லம்ப். 11ஆவது ஓவரின் முடிவில் அந்த அணி 100 ஓட்டங்களைத் தொட்டது. தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி 12.3 ஓவரில் 124 ஓட்டங்களை எடுத்து 2012ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது.
சிட்னி அணி சார்பாக லம்ப் 42 பந்துகளில் 5 சிக்ஸர், 8

82 ஓட்டங்களை ஆட்டமிழப்பின்றி குவித்த லம்ப் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். தொடர் நாயகன்

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !