
எந்த ஒரு விஷயத்துக்கும், அதற்கு முந்தைய நிகழ்வு அல்லது படைப்புதான் இன்ஸ்பிரேஷன் என்பது மறுக்க முடியாத உண்மைதான்
ஆனால், அதை அப்படியே காப்பியடிப்பது ஏற்க முடியாதது. தமிழ் சினிமாக்காரர்கள் பெரும்பாலும் இந்த இரண்டாம் ரகத்தினராகத்தான் இருக்கிறார்கள்.
ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்க வேண்டியது.. அதை அப்படியே சீன் பை சீன் உருவி தமிழ்ப் படமாக்குவதுதான் இவர்களின் பாணி. முன்னணி இயக்குநர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இதற்கு விலக்கில்லை.
தெய்வத் திருமகள் படத்தைப் பார்த்துவிட்டு சராசரி ரசிகன் பாராட்ட, சினிமா தெரிந்தவர்களோ தெய்வத் திருட்டு மகள் என்று திட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். காரணம் ஐயாம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது அந்தப் படம்.
கஜினி படம் பெரும் வெற்றிப் பெற்றாலும், அது ஏற்கெனவே வந்த மொமன்டோவிலிருந்து உருவப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியது.
சொந்த சரக்கு இருந்தாலும், ஒரு படத்தில் ஏதாவது நல்ல சீன் இருந்தால் அதை அப்படியே எடுத்தாள்வது நம்மவர்களின் வழக்கமாகிவிட்டது.
இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது, கஜினி புகழ் முருகதாஸ் இயக்க, விஜய் நடிக்கும் துப்பாக்கி.
இந்தப் படத்தின் தலைப்பு, தலைப்பின் டிசைன் எல்லாம் எங்களைப் பார்த்து காப்பியடித்து வைக்கப்பட்டது என ஒருவர் கேஸ் போட்டு, அதிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ விளம்பர டிசைன் இன்று வெளியானது. அதில் விஜய் ராணுவ உடையில், காஜல் அகர்வாலைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். காஜல் அகர்வால் தலையில் விஜய்யின் மிலிட்டரி தொப்பி.
அப்படி கட் பண்ணுங்க… An Officer and a Gentleman என்று ஒரு படம். 1982-ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படம்.
அதில் ஹீரோ கடற்படை வீரன். தன் காதலியை தூக்கிக் கொண்டு நிற்பார். காதலி தலையில் அவனது கடற்படை தொப்பி!!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !