
இது புலம்பெயர் தமிழர்கள் உட்பட தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக பிரிகேடியர் சக்கியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் கொழும்பில் உள்ள அரசியல் விஞ்ஞானதுறையினர், இந்த அமைப்பு பற்றி நன்கு அறிந்தவர்களுடன் பேசிய போது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
அந்த தகவல்கள் அனைத்தையும் வெளியிடுவது தமிழர் தரப்புக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் என்பதால் சில விடயங்களை மட்டுமாவது தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிடுகிறோம்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே விளங்கி வருகிறது.
தமிழ் மக்களின் முக்கிய சக்தியாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, Verité Research Pvt. Ltd . என்ற மதியுரை நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியது.
வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது.
இந்த நிறுவனம் முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்டதுடன் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் நெருக்கி செயற்படும் அமைப்பாகும். சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரே இந்த அமைப்பின் ஆலோசகர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனம் முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்டதுடன் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் நெருக்கி செயற்படும் அமைப்பாகும். சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரே இந்த அமைப்பின் ஆலோசகர்களாக உள்ளனர்.
தமிழர் தரப்பிற்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டும் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்த சிங்களவர்களை கொண்ட Verité Research Pvt. Ltd என்ற மதியுரை நிறுவன பணிப்பாளருக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
பிரித்தானிய தூதரகம் இதற்காக பெருந்தொகையான நிதியை அந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இது முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒப்பந்தம் செய்து கொண்ட விடயம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தவிர வேறு எவருக்கும் தெரியாது. மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ இந்த விடயம் தெரியாது.
இந்த நிறுவனம் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே கடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என சம்பந்தன் திடீரென அறிவித்தார் என்பதை தாம் பின்னர் அறிந்து கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் தலைவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
Verité Research Pvt. Ltd என்ற மதியுரை நிறுவனம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் தமிழர் விவகாரங்களை விசேடமாக கையாள்வதற்காக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் றிஸ்வி சக்கியை பணிக்கு அமர்த்தியுள்ளது.
பிரிகேடியர் றிஸ்வி சக்கி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த ஒருவராவார். இவர் 1990களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழர்களின் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவராக இருந்தவர்.
மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சக்கி வெள்ளைவான் கடத்தல், கொலை, அச்சுறுத்தல் கற்பழிப்பு என பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர். புளொட் மோகன், ராசிக் உட்பட இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களை இவரே வழிநடத்தி வந்தார். இந்த ஒட்டுக்குழுக்களை வைத்தே தமிழர்களை படுகொலை செய்து வந்தார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாகச் செயற்பட்ட பிரிகேடியர் றிஸ்வி சக்கி, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்டவர்களின் கொலைகள், கடத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்தவராவார். இவரின் கையால் மட்டும் பல தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.
1994ஆம் ஆண்டு படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வந்த குடும்ப பெண் ஒருவரை கைது செய்த சக்கி தலைமையிலான ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்து 5 வருடங்களாக தடுத்து வைத்திருந்தனர்.
இதன் பின்னர் விடுதலைப்புலிகள் பற்றி தகவல் தெரிந்தும் தமக்கு தகவல் கொடுக்க தவறினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 2000ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரி சக்தி தனக்கு செய்த சித்திரவதைகளை அப்பெண் நீதிமன்றில் விபரித்திருந்தார்.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடூரமாக செயற்பட்ட இராணுவ புலாய்வு பிரிவு அதிகாரியை ஆலோசகராக கொண்ட நிறுவனத்துடன் சம்பந்தனும் சுமந்திரனும் ஒப்பந்தம் செய்து அவர்களின் ஆலோசனையின் படி செயற்படுவது தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பிரிகேடியர் சக்கி இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பாகிஸ்தானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
தமிழர்களின் படுகொலைகள் மற்றும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த பிரிகேடியர் சக்கியை, அந்த மதியுரை நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது, சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியை வழங்கும் பிரித்தானிய தூதரகம் உட்பட வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தினக்கதிர் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த விடயம் எதுவும் எமக்கு தெரியாது.
இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்யப்போவதாக ஒரு வருடத்திற்கு முதல் மின்னஞ்சல் ஒன்றை சுமந்திரன் அனுப்பியிருந்தார்.
அது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆராயப்படவில்லை.
பின்னர் தன்னிச்சையாக சுமந்திரனும் சம்பந்தனும் முடிவெடுத்து அந்த நிறுவத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டனர்.
அதன் பின்னர் தற்போதுதான் அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் பிரிகேடியர் மேஜர் சக்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.
ஓப்பந்தம் செய்வதற்கு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி முடிவு எடுத்திருக்க வேண்டும். அந்த நிறுவனம் யார். இதன் பின்னணி என்ன என்று தெரிந்து கொண்டுதான் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் அபாயகரமான பாதாளத்திற்குள் கொண்டு போய் விழுத்துவதற்கு வழிகோலும் வகையில் சிங்கள நிறுவனத்துடன் அதுவும் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களை கொண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க சுமந்திரனின் சதி வேலையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படுவது என ஆலோசனை வழங்குவதற்கு சிங்கள நிறுவனத்துடன் அதுவும் ஸ்ரீலங்கா இராணவ புலனாய்வு பிரிவின் முக்கிய நபர்கள் அங்கம் வகிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன் என்பது பற்றி சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் தலைவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தனுடன் தாங்கள் பேச வேண்டும் என கோரிய போதிலும் அதனை அவர் தட்டிக்கழித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு செல்வதில்லை என்ற முடிவு, மகிந்த ராசபக்சவை சம்பந்தன் தனியாக சந்திப்பது உட்பட தமிழ் மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகள் அனைத்தும் இந்த சிங்கள நிறுவனத்தின் ஆலோசனைப்படி சம்பந்தன் செயற்படுகிறார் என்றும் இதற்கு மூல காரணமாக இருப்பவர் சுமந்திரன் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினக்கதிருக்கு தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இராஜதந்திர ஆலோசனை தேவைப்பட்டால் பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் வழங்கிய மில்லியன் கணக்கான நிதியை கொண்டு தமிழ் சட்டஅறிஞர்கள், அரசியல் விஞ்ஞானதுறை பேராசிரியர்கள், தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்ட அறிஞர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும்.
அப்படி செய்யாமல் சிங்களவர்களை கொண்ட அதுவும் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரை கொண்டVerité Research Pvt. Ltd நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு சம்பந்தனும் சுமந்திரனும் பதிலளிப்பார்களா?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !