மட்டக்களப்பு சிறைக்கைதிகள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை கூரை மீதேறி ஆறு சிறைக்கைதிகள் கூறைகளின் மேல் ஏறி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
உணவு வழங்களில் முறையற்ற விதத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் சிறைக்கூடங்களில் அதிகளவான கைதிகளை அடைத்துவைப்பதாகவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
எம்தொடர்பில் இதுவரையில் நீதிமன்றில் எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் தாம் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் சிறைச்சாலைக்குள் தாங்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாகவும் சிறைக்கைதியொருவர் தெரிவித்தார்.
தாம் ஆறு பேர் மட்டுமே மேல் ஏறி நின்று போராடிவருவதாகவும் ஏனையவர்கள் கீழ்ப்பகுதியில் இருந்து தமக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அக்கைதி தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராடப்போவதாகவும் பல தடவைகள் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் கைதிகள் தெரிவித்தனர்.
இதுவரைகாலமும் பின்பற்றப்படாமலிருந்த சில நடைமுறைகளை பின்பற்றுமாறு அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினரால் கடந்த வாரம் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்புச் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒவ்வொரு பிரிவாகச் சென்று உணவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நேற்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்த ஜி பிரிவிலுள்ள சுமார் 35 பேர் தங்களது இருப்பிடங்களுக்கு கொண்டுவந்து உணவை தரவேண்டுமெனக் கூறி நேற்று ஞாயிற்றுக்கிழமை உணவை பெற்றுக்கொள்ளவில்லை.
இவர்களில் 6 பேர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !