
கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றுமா..? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா..? என்னும் போட்டி நடைபேறும் வேளை. இந்த ஆட்டத்தின் வெற்றியைய் தீர்மானிப்பவராக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது..
உண்மையில் அப்பட்டமாக சொல்லபோனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசுடன் இணையவே அதிக நாட்டம் கொண்டுள்ளது. அதை வெளிக்காட்டாமல் தமிழ் கூட்டமைப்புடனும் பேசுவதாக காட்டிக்கொள்ள காரணம் தமது பேரம் பேசும் அலகை கூட்டிக் கொள்வதற்காகவே அன்றி எம்மை பாரிய கட்சியாக மதிப்பதால் அல்ல..இப்போழுது இவர்கள் தான் கடவுள் என்ற நிலை அது அவர்களின் இப்போதைய விதி. இதை நாம் பார்த்து போறாமை பட தேவை இல்லை பொறுப்புடன் பார்க்க கேட்கின்றேன், அவர்களின் அரசியல் சணக்கியத்தை நாமும் பின் பற்றினால் என்ன.? என சற்று சிந்திக்க வேண்டுகின்றேன். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நாமாக இருந்தாலும் இப்போழுது அவர்கள் எம்மை விட உயர்வில் தான் இருக்கின்றார்கள்.அரசியல், அபிவிருத்தி, கல்வி, வர்த்தகம் என பல்வகையான முன்னேற்றம். இதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்குள்ளும் பல ஊழல்கள், போட்டிகள் உட் பூசல்கள் இருந்தாலும் தேர்தல் காலத்தில் அதை மூட்டை கட்டி வைத்து தமது வாக்கு வங்கிகளை நிறப்பி எப்படியோ தமக்கு வாக்களித்த மக்களின் குறைந்த பட்ச தேவைகளையாவது போட்டி போட்டு நிறை வேற்றி வந்துள்ளனர். இது அவர்களின் அரசியல் சாணக்கியமாகவும் அமைந்து விட்டது.
கடந்த 30 -40 வருடங்களாக நாம் செய்தது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்த்தோம். அதையும் மீறி அரசுக்கு அதரவு அளித்தவர்கள் துறோகிகளாக கணிக்கபட்டு மாரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மறுபக்கம். இதனால் எமது புத்தி ஜீவிகளை இழந்து அரசியல் அனாதைகள் அக்கப்பட்டோம். இது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. எதிர்த்து அரசியல் செய்தால் எமது பிரச்சனைகள் சர்வதேசத்துக்கு புரியும் என நாம் நம்பி இருந்தே மடிந்தும் விட்டோம்.
நாம் பறிகொடுத்த இந்த 30 வருடத்தை நாம் எங்கே போய் தேடுவது. யாரிடம் போய் கேட்பது. இனியும் இன்னோருவரை நம்பி பயன் இல்லை. நாமே நம்மை ஆழவேண்டிய தருணம் இது. இதுவரை எதிர்த்தே வாழ்ந்த நாம் ஏன் ஒரு முறை சார்ந்து சாதிக்க முன் வரக்கூடது.? இன்று எமக்கும் முஸ்லிம் சகோதரர்களின் பிரதேசங்களுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் றிதிதென்ன தொடக்கம் திருக்கோயில் வரைக்கு நாம் பயணிக்கும் போது எமது பிரதேசங்கள் சுடு காடு போல் அமைந்தும். முஸ்லிம் பிரதேசங்கள் பட்டினமாகவும் திகழ்கின்றதை பார்த்து வேதனை மட்டும்தான் அடைய முடிந்தது.
இதை இனி நாம் ஏன் மாற்ற முடியாது . இந்த கிழக்கு மாகாண ஆட்சியைய் கைப்பற்ற அரசாங்கம் எதை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கின்றது. ஏன் அரசுக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவார் என பிரச்சாரம் செய்த நாமே. இப்போழுது முதல்வரை விட்டுத்தருகின்றோம் எம்மோடு இணைய வாருங்கள் என மு.காங்கிரஸ்காக காத்து கிடக்கின்றோம்.
இவ்வாறு முஸ்லிம் கங்கிரஸுக்காக அரசு தவம் கிடப்பது போல் ஏன் எம்மால் மட்டும் அவ்வாறு இருந்து சாதிக்க முடியாது..? நம்மை நாமே ஆழ ஏன் இன்னொருவரை நாட வேண்டும் எமக்கு அதற்கான தகுதி இல்லையா..? அல்லது சக்தி இல்லையா..?ஆகவே.! தமிழ் கூட்டமைப்பின் மாபெரும் துண்களாய் இருக்கும் மதிப்புக்குரிய தலைவர்களே..! நான் உங்கள் முன் ஒரு சிறுவன்தான். உங்கள் அறிவிற்கும் அரசியல் அணுபவத்திற்கும் முன் ஒரு கை பிடி மண்தான் ஆவேன். என் மனதில் தோன்றியதை வெட்டி வார்த்தைகளாய் கொட்டாது அதை உயிர்ப்படுத்த உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் வேண்டுகின்றேன்..
" என் மக்களுக்கான புதிய விதியை நோக்கி..."
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !