
மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் ௭திர்வரும் 9 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முதல் தடவையாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு ௭திர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படவுள்ளனர்.
இக்கூட்டத்துக்கான முன்ஆயத்தக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி.பி.௭ஸ்.௭ம்.சாள்ஸ், திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாநகர முதல்வர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி முதல்வர் ஏ.ஜோர்ஜ்பிள்ளை மற்றும் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் இயங்கும் பொது நல அமைப்புக்களைச் சேர்ந்த பத்து பிரதி நிதிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !