
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவன் கிசார எஸ்.கொடித்துவக்கு மற்றும் தலாத்துஓயா வித்தியாலய மாணவி ஆர்.எம்.ஏ.யு.மதுவந்தி ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளி 196 ஆகும்.
3ம் இடத்தை கந்தனை எட்வன்டிஸ் உயர்தர பாடசாலை மாணவி டபிள்யு.எம்.ஏ.ஆதித்யா பண்டார விக்ரமசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். இவர் பெற்ற புள்ளிகள் 195 ஆகும்.
வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152 ஆகும்.
ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 148 ஆகும்.
அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் பதுளை ஆகிய மாட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 146 ஆகும்.
அம்பாறை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 145.
வவுனியா, திருகோணமலை மாவட்டங்களுக்கு 144.
நுவரெலியா மாவட்டத்திற்கு 143.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள்திருத்தத்திற்கு எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !