இந்த விஷேட திட்டத்துக்கென தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தில் சுமார் 13 கோடியே 90 இலட்சம் ரூபாவை தற்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் அங்கீகாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அமுலாக்கத்தின் நடவடிக்கைகளை ஆராய தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் அமைச்சரான தொலைத் தொடர்பு ,தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று இப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !