Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920: கைகொடுக்குமா?

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920: கைகொடுக்குமா?

Written By sakara on Thursday, September 6, 2012 | 10:37:00 PM


கையடக்கத்தொலைபேசிச் சந்தையில்  நொக்கியா என்ற சொல்லை அறியாதவர்கள்  இல்லையெனலாம். 
குறிப்பாக ஆசிய நாடுகளில் நொக்கியாவுக்கு என்றுமே தனியான கூட்டமிருந்தது.
 
நியாயமான விலையில்,நீண்டகால பாவனைக்கேற்ற அனைவருக்குமான கையடக்கத்தொலைபேசியினைத் தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது நொக்கியாதான் என இன்றும் பலர் கூறுவதனைக் கேட்கலாம்.
 
குறைந்த விலை, 3 ஆம் தர மற்றும் மத்தியதர சந்தைக்கான கையடக்கத்தொலைபேசிகளைத் தயாரிப்பதில் நொக்கியா  ஜாம்பவானாகத் திகழ்ந்தது.
 
எனினும்  நுகர்வோர் மெல்லமெல்ல ஸ்மார்ட் போன்களை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
 
இருந்தபோதிலும் ஸ்மார்ட் போன் சந்தையில் நொக்கியாவால் பெரிதாக எதுவும் சாதிக்கமுடியவில்லை.
 
அப்பிள் மற்றும் செம்சுங் என்ற இரண்டு மிகப்பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் நொக்கியாவால் மோதி ஜெயிக்கமுடியவில்லை.
 
இதன்காரணமாக பங்குச்சந்தையிலும்  நொக்கியா வீழ்ச்சியையே சந்தித்து  பலவகையில் போராடி சலித்துப்போனது நொக்கியா.
 
பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  தன்னை ஸ்மார்ட் போன் சந்தையில் மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளும் பொருட்டு வின்டோஸுடன் கைகோர்த்தது நொக்கியா.
 
அண்ட்ரோய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இன் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன் சந்தையில் வின்டோஸ் மூலம் பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கி சந்தையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே இவ்விரு நிறுவனங்களும் இணைந்தமைக்கான பிரதான காரணமாகும்.
 
இதனையடுத்து வின்டோஸ் மூலம் இயங்கும்  சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது நொக்கியா.
 
லுமியா எனப் பெயரிடப்பட்ட வின்டோஸ் மூலம் இயங்கும் நொக்கியா ஸ்மார்ட் போன்கள் தொடர்பில் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பினைப் பெறமுடியவில்லை.
 
வின்டோஸுடன் இணைந்தபோதிலும் நொக்கியாவின் சரிவு தொடர்ந்தது.
 
இந்நிலையில் இறுதி முயற்சியாக வின்டோஸுடன் புதிய இயங்குதளமான  வின்டோஸ் 8 மூலம் இயங்கும் லுமியா 920 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
 
 
பல நவீன வசதிகளுடன் கூடிய லுமியா 920 ஸ்மார்ட் போனை நொக்கியா மிகவும் நம்பியுள்ளது. இது தனக்கு இறுதி மூச்சளிக்குமென எதிர்பார்க்கின்றது.
 
 
இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது,
 
1280-pixel-by-768-pixel resolution உடன் கூடிய 4.5 அங்குலPure motion HD + WXGA IPS LCD திரையைக் கொண்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மிகத்தெளிவான திரைகளில் ஒன்றாக இத்திரை கருதப்படுகின்றது.
 
மேலும் இத்தொடுதிரையானது 'Super Sensitive'  என நொக்கியா தெரிவிக்கின்றது.
 
இதனுடன் 8.7 மெகா பிக்ஸல், 3264 x 2448 pixels, Carl Zeiss optics, optical image stabilization, autofocus, LED flash வசதியுடன் கூடிய PureView தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராவினைக் கொண்டுள்ளது.
 
இக்கெமராவானது பல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கெமராக்களை விட சிறந்ததென நொக்கியா தெரிவிக்கின்றது.
 
லுமியா 920 இல் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் வயர்லெஸ் அதாவது வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியாகும்.இதற்கென தனியான சார்ஜிங் பேளேட்டை நொக்கியா பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
 
இதனைத்தவிர 
 
டுவல்கோர் 1.5  GHz Krait புரசசர்
Adreno 225 ஜி.பி.யு
Qualcomm MSM8960 Snapdragon சிப்செட்
NFC எனப்படும் (Near Field Communication) 
HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
 
 

 
 
நொக்கியா லுமியா 920 ஸ்மார்ட் போனானது அதி நவீன வசதிகள் பலவற்றைக்கொண்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதனால் சந்தையில் முன்னணியில் உள்ள அப்பிள் மற்றும் செம்சுங் ஆகியவற்றை வெற்றிகொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 
அண்மையில் வெளியாகிய செம்சுங்கின் கெலக்ஸி S3 விற்பனையில் சாதனைபடைத்து வருகின்றது.
 
அதேபோல செம்சுங் கெலக்ஸி நோட் 2 ஸ்மார்ட் போனையும்  அண்மையில் அறிமுகப்படுத்தியது இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி அப்பிளின் ஐ போன் 5  அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
எனவே சந்தையில் இலகுவாக ஆதிக்கம் செலுத்தலாம் என நொக்கியா கருதினால் அது வெறும் கனவாகவே இருக்கப்போகின்றது. 
 
தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள ஸ்மார்ட் போன்கள் சிலவற்றுடனான ஒப்பீடு
 
  
 
எனினும் நொக்கியாவுக்கென தனிக்கூட்டம் உள்ளது. அதனுடன் வின்டோஸ் 8 இயங்குதளமானது பலரையும் கவர்ந்துள்ளது. அதனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் லுமியா 920 பாவனையாளர்கள் மனதைக் கவருமா இல்லையா என
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya