
லாஸ் வெகாஸிலுள்ள மேற்படி ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட விருந்துபசாரத்தில் முழு நிர்வாணக் கோலத்தில் இருந்த ஹரியுடன் நிர்வாண கோலத்தில் காணப்பட்ட பெண் காரி ரெய்சேர்ட்.
இளவரசர் ஹரியும் காரி ரெய்சேர்ட்டும் (32 வயது) தோன்றும் நிர்வாணப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மேற்படி விருந்துபசார நிகழ்வின்போது இளவரசர் ஹரி நிர்வாணக் கோலத்தில் இருந்ததாகவும் தான் அவருக்கு தன்னை அறிமுகப்படுத்தியவுடன் அவர் தன்னை தனது கரங்களால் அரவணைத்தவாறு தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றதாகவும் காரி ரெய்சேர்ட் கூறினார்.
இந்நிலையில் தான் தனது ஆடைகளைக் களைந்து மெல்லிய நீச்சல் ஆடையில் ஹரியின் முன் தோன்றியதாகவும் அவர் தன்னை முத்தமிட ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். இளவரசர் ஹரி முத்தமிட்ட நிகழ்வைத் தன்னால் மறக்க முடியாது ௭னக் குறிப்பிட்ட காரி ரெய்சேர்ட் அவரது முத்தம் காதல் ரீதியானதாக இருக்கவில்லை ௭னவும் வேடிக்கைக்காகவே அவர் முத்தமிட்டதாகவும் கூறினார்.
அதன் பின் பிரித்தானியாவிலான தனது சிறுபராய வாழ்க்கை குறித்து இளவரசர் ஹரியுடன் கலந்துரையாடியதாகவும் தொடர்ந்து இருவரும் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு மது அருந்தியதாகவும் பின்னர் தான் ஹோட்டலிலுள்ள தனது அறைக்குத் திரும்பியதாகவும் காரி ரெய்சேர்ட் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !