
M><ThananChayan<<>>
சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தினை ஒட்டி நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த வகையில் இன்று சுவாமி விவேகானந்தரின் ஆத்மீக எழுச்சி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் மட்/களுதாவளை மகாவித்தியாலய மண்டபத்தில் விழாக்குழவின் தலைவரும் பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு.ச.நாகராசா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந. புள்ளநாயகம் பிரதம அதியாக கலந்து கொண்டார். அத்துடன் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை விழாக்குழு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மு.பவளகாந்தன் அவர்களும் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் அவர்களும் கௌரவ அதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர். திரு.பூ.பாலச்சந்திரன் அவர்களுடன் ஆத்மீக அதிகளாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கபாலிதானந்தஜீ அவர்களும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
ஆத்மீக எழுச்சி ஊர்வலம் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கபாலிதானந்தஜீ அவர்களின் ஆசீர்வாதத்துடன் மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலிருந்தும், மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தலிருந்தும் ஆரம்பமானது. இவ் எழுச்சி ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். எழுச்சி ஊர்வலம் இரு பக்கங்களிலும் இருந்து மட்/களுதாவளை மகாவித்தியாலயத்தினை வந்தடைந்ததும் அங்கு சுவாமி விவேகானந்தர் அவர்களை நினைவு கூறும் வகையிலான சிறப்புச் சொற்பொழிவுகளும் கலை நிகழச்சிகளும் நடைபெற்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !