![]() |
கணனிகளில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளதால் இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினிக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

இப்பொழுது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர். இந்த புதிய வெர்சனில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளனர்.

மேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும்.

இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். சோதனைத் தொகுப்பு என்பதால் இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது, தேவையானவர்கள் கீழே உள்ள தொடுப்பின் ஊடாக சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Download - http://forums.iobit.com/showthread.php?t=13401
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !