![]() |
இச்சம்பவத்தின் போது காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் மற்றும் ஹூஸைனயா பள்ளிவாயில் ஆகிய இரு பள்ளிவாயல்களில் புனித இரவுநேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடாத்திய துப்பாக்கித்தாக்குதல்களினால் 103 பேர் ஸ்தலத்திலேலேயே படுகொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொழுகையிலிருந்த 265பேர் படுகாயமடைந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் 22ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் கடைகள் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.நகரில் வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. பள்ளிவாயில்களில் விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !