ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் சற்று முன்னர் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, 'அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அரசில் அமைச்சர் பதவியொன்றைப் பெறுவதற்காக, தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து, தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்லை என்றும், காட்சிக்காகவே தான் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அரசின் பிரதியமைச்சராக இருந்துகொண்டு அரச வாகனங்களையும், வளங்களையும் பாவித்து, முஸ்லிம் காங்கிரஸ_க்காக பிரசாரம் செய்வதைத் தான் விரும்பவில்லை என்றும், தனது சொந்தச் செலவில் கட்சிக்காக இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துவிட்டே இந்த ராஜினாமாவைத் தான் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பசீர் சேகுதாவூத், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !