
ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டின் கலவை என வர்ணிக்கப்படும் செம்சுங்கின் கெலக்ஸி நோட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தோற்றத்தில் சற்று பெரியது என்ற போதிலும் பெரிய தெளிவான திரை, நவீன வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தமையினால் கெலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலரைக் கவர்ந்தது.
அவ்வரிசையில் செம்சுங் தற்போது செம்சுங் கெலக்ஸி நோட்2 இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேர்லினில் நடைபெறும் IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி நோட் ஆனது 5.3 அங்குல திரையையே கொண்டுள்ளது.

அண்மையில் கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்ட அண்ட்ரோய்ட் 4.1 ஜெலிபீன் மூலமே கெலக்ஸி நோட் 2 இயங்குகின்றது.
இதைத்தவிர வேகமான செயற்பாட்டுக்கு 2 ஜி.பி. ரெம், 1.6 GHz குவார் கோர் புரசசர் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் நவீன ஸ்டைலஸ் பேனா ஒன்றையும் கொண்டுள்ளது.
தொடுதிரைக்கு வேகமான துலங்கலைக் காட்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப் பேனாவானது புதுமையான வசதிகள் பலவற்றையும் கொண்டுள்ளது.
பல அப்ளிகேசன்கள் ஸ்டைலஸ் பேனாவுக்கு ஏற்றாற் போல செயற்பட உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்பவிலை சுமார் 800 அமெரிக்க டொலர்களாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கெலக்ஸி நோட்2 வின் மற்றுமொரு முக்கியத்துவம் என்னவெனில் செம்சுங்குக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னிய நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
கெலக்ஸி நோட் மற்றும் நோட் 2 இடையிலான தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான ஒப்பீடு

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !