![]() |
இணையத்தில் மைக்ரோசொப்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலப்பகுதியில் தைரியமாக புகுந்து வெற்றிகண்ட உலாவியாக பயர்பொக்ஸினை அடையாளப்படுத்தலாம்.
ஒப்பெரா உலாவியால் முடியாததை பயர்பொக்ஸ் செய்துகாட்டியது.
பயர்பொக்ஸின் திறந்து விட்ட வழியினாலேயே கூகுளின் குரோம் வெகுவாக உலாவிச் சந்தையில் முன்னேறியது என்று கூடக் கூறலாம்.
உலாவியில் புதுமைகளைப் புகுத்திய பயர்பொக்ஸ் தற்போது மொபைல் இயங்குதளச் சந்தையிலும் நுழையவுள்ளது.

Boot to Gecko (B2G) என்ற மொஸிலாவின் திட்டத்தின் கீழ் இவ் இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
எல்கடெல் ( Alcatel) என்று அறியப்பட்ட (TCL Communication Technology) மற்றும் ZTE ஆகிய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் மொஸிலா தனது இயங்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளைத் தயாரிப்பதற்கென கைகோர்த்துள்ளது.
மேலும் டச் டெலிகொம், எடிசலாட், ஸ்மார்ட், ஸ்பிரிந்த், டெலிகொம் இடாலியா, டெலி போனிகா, டெலிநோர் ஆகிய தொடலைத்தொடர்பாடல் வலையமைப்பு வழங்குநர்களுடன் மொஸிலா உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
எனினும் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகியன அசுர வளர்ச்சியடைந்துள்ள மொபைல் இயங்குதள சந்தையில் மைக்ரோசொப்ட் போன்றதொரு மிகப் பெரிய நிறுவனமே திண்டாடி வரும் நிலையில் மொஸிலா நுழையவுள்ளமையானது ஆச்சரியப்படவைக்கின்றது.
குறிப்பாக அண்ட்ரோய்டானது சாதாரணம் முதல் உயர்தர மொபைல் சாதனங்கள் வரை அனைத்து சந்தையையும் தன் வசம் வைத்துள்ளது.
அண்மைய ஆய்வொன்றின் முடிவின் படி 2015 ஆம் ஆண்டளவில் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் சீனாவில் குறைந்தபட்சம் 80 % ஆன விலை குறைந்த மொபைல் (low-end devices) சாதனங்களுக்கான சந்தையை அண்ட்ரோய்ட் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே விலை குறைந்த மொபைல் சாதனங்களுக்கான சந்தையையே நொக்கியாவும் இலக்காகக் கொண்டுள்ளது.
எனவே பயர்பொக்ஸ் சந்தையில் நுழையும் போது அது கடுமையான போட்டிக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !